அடுத்து என்ன சொல்லி
விடுமுறை கேட்பது??

மனம் ஏனோ இதையே சிந்திக்கிறதே

வான் மகளுக்கு
மேக காதலனோடு
சண்டைபோலும்
ஊடலை கண்ணீராய் சிந்த
என்னக்குள் ஆனந்தம்..
அடடா ....
விடுமுறைக்கு வேளை வந்துவிட்டதே...
காலையில் அழகாய் புறப்பட்டு
சில்லென வீசும் காற்றும்
முள்ளாய் குத்தும் மழையும்
இருள் சூழ்ந்த வீதியில்
கடமை உணர்வோடு
அலுவலக செல்ல

இரெண்டே நிறுத்தத்தில்
அலுவலகம் சென்றடையும்
தூரம் இருக்கையில்
இந்த மழையில் அலுவலக செல்ல வேண்டுமா??

எண்ண அலைகள்
குழப்பத்தில் சுழல
அடுத்த நொடியில் வண்டி தானாக
இல்லம் நோக்கி பயணிக்க
இரண்டு மணிநேர
ஊர் சுற்றலுக்குப் பின்
முழுதாய் நனைந்து
புதிதாய் மலர்ந்த பூவாய்
முகம் மலர அடடே
முகம் பளிச்சென்று இருகின்றதே...
கண்ணாடியில் கண் சிமிட்டி சிரித்து..
விடுமுறை கொண்டாட்டத்தில்
குளிர் கூட இதமாய் போனது....
aiiiiiiii joly leave potachu
