« on: December 25, 2018, 07:50:28 AM »
பூமியெங்கும் பனித்துளிகள் தூவ ...
குளிர்காற்றின் போர்வையில் ...
பரிதவிக்கும் மனிதர்களின் ...
பாவ மூட்டையின் கணத்தில் .
உலகுஎங்கும் தள்ளாட...
இரவின் இருளை கிழித்து....
மூன்று தேவதூதர்கள் வழிகாட்ட ...
ஒளிவீசி உயிரூட்ட ...
பிறந்திட்டான் தேவ மகன் !
பரிசுத்த கன்னி மேரி ...
கருவுறாமல்...விண்ணிலே ..
விதைத்திட்ட மாமணியாய்..
எங்கள் பாவச்சுமை நீக்க வந்த..
பரமபிதாவே!
உம்மை வணங்குகிறோம்!
எம் பாவங்களை கரைக்க ...
நீர் சிலுவை சுமந்து..எம் ..
உள்ள அழுக்குகளை ....களைய ..
நீர் முள் கீரிடம் அணிந்தீர் !
உலக ஆன்மாக்களை ...
உயிர்ப்பிக்க வந்த உத்தமரே !
உம் காலடியில்.... எம் பாதம் பணிகின்றோம்!
எங்கள் அக கண்களை திறந்து.....
உள்ள தூய்மை படுத்தி ... .
என்றும் உம் அருளுடன் ..
இப்பிறவியை ஆசீர்வதியுங்கள் !
ஆமென் !இனிய கிறிஸ்து ஜெயந்தி வாழ்த்துக்கள் !


« Last Edit: December 25, 2018, 08:00:57 AM by RishiKa »

Logged