Author Topic: சாகரம்  (Read 655 times)

Offline SweeTie

சாகரம்
« on: November 07, 2018, 07:11:27 PM »
மொட்டவிழ்க்கும் மலர்களின் வாசனை
மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரம்
குழந்தையின் முல்லைச் சிரிப்பு
புதுவரவின்   புத்துணர்வு 

இரை தேடும் சிற்றெறும்பு கூட்டம்
இரவு பகல் பாரா கடும் உழைப்பாளிகள்
இன்றய  சேகரிப்பு நாளைய உலகம் 
உழைப்பே  வாழ்க்கை

இலையுதிர் காலத்து பழுத்த இலைகள்
இயற்கையை அழகூட்டும் நிறங்கள்
காற்றில் பறந்து நிலத்தில்  விழுந்து
காய்ந்துபோகும்  சருகுகள்

கரையை நாடும்  சிற்றலைகள்
பிடிக்க துரத்தும் பேரலைகள்
தொடரும்  மரதன்  ஓட்டம் 
வாழ்க்கை ,முடிவில்லா   சாகரம்


 

Offline JoKe GuY

Re: சாகரம்
« Reply #1 on: November 08, 2018, 10:27:45 AM »
உங்களின் கவிதைப் பூங்காவில் நீண்ட நாள் கழித்து இன்று ஒரு கவிதை மலர் பூத்த தற்கு நன்றி
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline SweeTie

Re: சாகரம்
« Reply #2 on: November 08, 2018, 08:53:20 PM »
ஆமாம்.   கொஞ்சம்   பூப்பதற்குரிய  உரம்  போட்டுள்ளேன்.   அதனால்  அடிக்கடி
பூக்க வாய்ப்புண்டு.   பூக்களை பறித்துவிடாதீர்கள்.  நன்றி