Author Topic: நம்பிக் கை வை  (Read 836 times)

Offline thamilan

நம்பிக் கை வை
« on: November 01, 2018, 10:03:12 PM »
மண்ணுக்குள் விதைத்த  விதை
முளைத்து மரமாகவில்லையெனில்
விதைத்த வித்தையால்
எந்த பயனும் இல்லை

அது போல
உனக்குள்ளே புதைந்திருக்கும் திறமைகளை
வெளிக் கொனறவில்லையெனில்
உன்னிடம் திறமைகள் இருந்தும்
ஏதும் பயனில்லை

தோழனே
அலட்சியங்களை உறங்க வை
இலட்சியங்களை தட்டி எழுப்பு
உறங்கிக்கிடக்கும் உன் திறமைகளுக்கு
புத்துயிர் கொடு
நாளைய உலகம் நிச்சயம் உன்னை
திரும்பிப் பார்க்கும்

தன்னம்பிக்கை அதிகம் வை
ஒருபோதும் தான் தான் என்ற
நம்பிக்கை வைக்காதே
ஆணவம் அழித்துவிடும்
உனக்குள் இருக்கும் அத்தனை திறமைகளையும்

Offline JoKe GuY

Re: நம்பிக் கை வை
« Reply #1 on: November 09, 2018, 07:24:48 PM »
அருமை  தோழரே  வளரட்டும் உங்களின்  கவிதை செடிகள்
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்