Author Topic: அன்பு சகோதரிக்கு !  (Read 926 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அன்பு சகோதரிக்கு !
« on: October 05, 2018, 06:38:10 PM »
மன வேதனையில்
அரட்டை அடிக்காமல்
ஒதுங்கியிருந்த நான்

மீண்டும் அரட்டை அரங்கத்தில்
வந்தநாள்
ஒரு வார்த்தை பேசாமல்
நான் இருந்தபோதும்
கண்டுகொண்டாய் என்னை
நான்யாரென

யாருடனும் பேசாமல் இருக்க எண்ணி தான் வந்தேன்
உன் கலகல பேச்சு அதை மாற்றியது

எதையும் பேசிக்கொண்டதில்லை அதிகமாய்
இருந்தும் ஏதோ ஜென்மத்தில் மிச்சம் வைத்த உறவு போல் தோன்ற
தங்கை என அழைத்தேன். நீயும் அண்ணா
என ஏற்றுக்கொண்டாய்

பல நாட்கள்
உன் உறவை பிரித்திடுவேனோ
என பயந்தே பேசாமல் இருந்ததுண்டு

நேசித்து நெருங்கி பழகும் எதையும்
நம்மிடம் இருந்து பிரித்து பார்ப்பதே
இறைவனின் விளையாட்டாய் போனதால்
கேட்ட செய்தி கெட்ட  செய்தி ஆயினும்
எதுவும் செய்யமுடியாமல் ஊமையாகி

ஒடுங்கி போனேன்
வார்த்தை ஏதும் வரவில்லை
கண்ணீர்மட்டும் விதிவிலக்காய்

சகோதரி,
உன் ரத்தபந்த சொந்த சகோதரனாய் இல்லாவிடினும்
உன் அழைப்புக்கு செவிசாய்க்கும்
உன் அன்பு சகோதரனின் பிரதிபலிப்பாய்
உன் அண்ணன் என்றும் நானிருக்கிறேன்.


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline DoRa

Re: அன்பு சகோதரிக்கு !
« Reply #1 on: October 06, 2018, 04:44:31 AM »
Nice Kavithai -jok NA :)
பல நாட்கள்
உன் உறவை பிரித்திடுவேனோ
என பயந்தே பேசாமல் இருந்ததுண்டு
Ipppdiye Ellam Nenaithal Life la yaaru kodiayum pesamale poitum Irukum Varai happy a santhosamaa iruthutu pesukka...indha ulagathil ethuyum nerathiram ile ..Inai Irukuravang Nalaiku Ile,...Irukum vaarai happy a irukka :)...ungal kavithai thodaratum :)jok na

Offline SaMYuKTha

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 541
  • Total likes: 1633
  • Total likes: 1633
  • Karma: +0/-0
  • Gender: Female
  • !~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: அன்பு சகோதரிக்கு !
« Reply #2 on: October 08, 2018, 10:56:41 PM »
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ஜோனா... உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் என்னை மீட்டு எடுக்கும் என நம்புகிறேன்...