Author Topic: நான் அலை !!  (Read 806 times)

Offline JasHaa

நான் அலை !!
« on: October 02, 2018, 09:22:40 PM »

நான் அலை  !!
கடல் தாயின்   கருதரித்தவள்  நான்...
அன்னை மடியில்  ஆர்பரித்தவள்  நான்...
மீன்களுடன்  மீளாது மூழ்கித்தவள்  நான்... சிப்பிகளுடன்  முத்துகளுடன் கொஞ்சி விளையாடிய  குமரி நான் ...
கரை  எனும் ஆடவனின்  மீது தீராக்காதல் கொண்டவள்  நான்...
அவனை நேசித்து  சுவாசித்து  அவனை நோக்கி  ஆர்ப்பரித்து  அலைமோதியவள் நான்  ...
நொடிக்கொறு முறை  அவனை நோக்கி  அலைமோதியவள் நான்  ...
என் காதல் அவனுக்கு  புரியவில்லையோ  ...
காதலிப்பது  ஆண்கள்  உரிமையோ  ...
அதனால்  தான் என் காதல் அவனுக்கு புரியவில்லையோ  ...
நீ காதல் கொள்வாயோ  இல்லையோ ...
நான் உன்னை தேடி  ஆர்ப்பரித்து கொண்டே  இருப்பேன் ...
காதலுடன் 
உனது  அலை ...

Offline DoRa

Re: நான் அலை !!
« Reply #1 on: October 06, 2018, 04:47:46 AM »
Nice Kavithai JASHAA