உன் திறமைகளை
உனக்குள் தேடித் பிடி
அதில் உனக்கான எல்லையை
தேர்ந்து குறி
அந்த இலக்கினில்
சிந்தனைச் சிறகை விரி
எதிர்ப்படும் தடைகளை
தகர்த்து ஏறி
தோல்விகளை ஏணிப்படிகளாக மாற்றி
அடைந்திடு வெற்றியின் வாசல்படி
முடியும் முடியும்
உன்னால் முடியும்
எதையும் வென்றிட
உன்னால் முடியும்