Author Topic: மழை என்னும் நான்  (Read 611 times)

Offline Guest

மழை என்னும் நான்
« on: September 07, 2018, 02:50:57 AM »
நான் மழையை கண்டேன்
புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன்
மேகங்கள் பிறசவித்த
உயிர்த்துளி வீழ்வதை
துல்லியமாய் நோக்கினேன்
புகைப்படத்தில் அவை
தெழிவு பெறவில்லை....
.
கண்ணாடி ஜன்னலோரம்
கைகள் காட்டி மழையை
கவர்ந்திழுத்தேன்
என் தலைமுடி நனைந்திருப்பதை
கர்வமாய் சிலாகித்து
அவ்வப்போது தலை கோதி
ஞாபகப்படுத்திக்கொண்டேன்..
.
கார் கண்ணாடியில்
அரை வட்டமடித்துக்கொண்டிருந்த
வைப்பர்கள் மழைத்துளிகளை
இரக்கமின்றி கொன்று வீசின...
மீண்டும் மீண்டும் விழும் துளிகள்
மரித்து வீழும்
துளிகளோடு சங்கமித்தன...
.
மின்னல் கீற்றுகள் கண்ணை
மறைத்துவிடுகின்றன
நீ ரசித்தது போதுமென மேகங்கள்
இடித்துரைத்து எம் செவிகளை
செவிடாக்குகின்றன...
.
வாட்சப்பில் வந்து
விழுகிறது மழைக்கடிதல்கள்
ஃபேஸ்புக்கில் வரிந்துகொட்டுகிறது
மழைக்கவிதைகள்
சிரித்து சிங்காரம் கொள்கிறது
நட்புக்குழுமங்கள்....
.
மழைத்துளி நான்
நான் அன்றாடம் உயிர்த்தெழுபவன்
நான் கடல் கொண்டு
உயிர்த்தெழும் முன்
இம்மண்ணின் அடிநாதம் இறங்கி
பலதை முளைப்பித்துச்செல்வேன்...
.
அறுத்தெறிந்து உயிர்கொன்று
பிழைத்திடாதீர்
வளர்த்தெடுங்கள் முளைத்திடும்
அருட்செடிகளை....
உயிர் பெற்று வந்து செல்கிறேன்...
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ