நீயேதான்.....
**************************
ஆவி பறக்க வந்த
பாத்திரம் திறந்து கரண்டியில்
எடுத்து லேசாய் சுவைத்துவிட்டு
கறியில் உப்பு அதிகம் எனும்போது
சோற்றி்ல் ஊற்றி சாப்பிடுடா
உப்பும் ஒரப்பும் சரியா இருக்குமென்பாய்....
.
கொதிக்க கொதிக்க கொண்டு
இப்படித்தான் வைப்பாயா
தண்ணீரை எனும்போது
சாப்பிட்டு முடித்தபின்தான்
தண்ணீர் குடிக்கணும்
உங்ககிட்ட யார் இடையில்
குடிக்கச்சொன்னா என்பாய்....
.
எப்போதும் போல் தட்டில்
கை வைக்கும்போதே
இருக்கையில் தங்கையின் சண்டை
லேசாய் கோபப்படுவதற்குள்
அவ சின்ன பொண்ணு அன்பாய்
சொல்லு- என
சமையற்கட்டிலிருந்து சத்தம் கொடுப்பாய்..
.
விளயாட்டின் களைப்பில்
அயர்ந்து தூங்கும் அதிகாலைகளில்
இன்னா எழுந்திருடா..
எழுந்திருடா.. என எரிச்சலூட்ட
கொஞ்சம் பொறு என்பேன் - மணி
எட்டு ஆச்சி இனி அந்த கம்யூட்டர எடுத்து
பொத்துணு போடணும் என்பாய்....
.
பள்ளிக்கான அவசரத்தில்
சட்டையை அயர்ண் செய்ய
எத்தனிக்கையில் எங்கோயிருந்து
ஓடி வருவாய்
எவ்வளவு சொன்னாலும் திருந்தமாட்ட
ராத்திரி இருந்து விளயாடுறப்போ
ஆயிரம் தடவை சொன்னாலும்
அயர்ண் பண்ண மாட்டீயே.....
.
நீ பேசுவதெல்லாமே
எதிர்மறையாயினும் என் எரிச்சலின்
உச்சத்தையே கிளப்பும் என்
பொறுப்பில்லாமையில் விழும்
கண்டன எச்சரிக்கைகள் என அறிவேன்...
.
உன் அகோர கோபங்களை உள்ளே
அடக்கிக்கொண்டு அவ்வப்போது
அக்கினியாய் கடந்து செல்லும்போதும்
லேசாய் தெறித்து விழுகிறது அந்த உதட்டோரப்புன்னகை....
எச்சரிக்கைகளை எள்ளிவிட்டு
அடுத்தது தயாராகிறேன்
மீண்டுமொரு பொறுப்பில்லாமைக்கு....
#அம்மாதிகாரம்....