Author Topic: கேள்வியில்லாத பதில்கள்...  (Read 586 times)

Offline Guest

ஒரு கதை சொல் என்றாய்
"அம்மா" என்றேன்


ஒரு கவிதை சொல் என்றாய்
"அம்மா" என்றேன்


ஏதாவது சொல் என்றாய்
"அம்மா" என்றேன்


ஈர மணலில் எழுதச்சொன்னாய்
அம்மா என்றே எழுதினேன்


ஆர்ப்பரிக்கும் அலை கண்டு பயந்து
அம்மா அம்மா என்றேயழுதேன் - பயமல்ல
அழகு என்றாய்....


யாருமற்ற கடற்கரை வெளியில்
ஏதோ திசை நோக்கி கை நீட்டி
அம்மா என்று அழத்தேன்- சிரித்துக்கொண்டாய்....


என்ன வேண்டும் என்றாய்
அம்மாவென்று சப்தமிட்டேன்....


யாரை பிடிக்குமென்றாய்
நீ அம்மாதான் என்று
அழுத்திச்சொன்னேன்...


எனக்காய் தெரியாத கதை சொல்வாள் நான் ரசித்தேன் அம்மாவை....


எனக்காய் தலை விரி கோலமானாய் - நான் சிரித்துக்கொண்டேயிருந்தேன்...


"அம்மா" எங்கே என்பேன்
எங்கிருந்து கேட்டபோதும்
ஓடி வந்து எனை கட்டியணைப்பாய்....


இன்னும்
யோசித்துப்பாற்கிறேன்...


இதோ நீ இல்லாத இல்லத்தில்
எனது படுக்கையின் அருகில்
உன் கேள்விகள் இல்லாமலே
பதிலாய் "அம்மா" என்று ஒயாமல்
சொல்லிக்கொண்டே - கண்களை
மூடிக்கொள்கிறேன்............


என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ