அம்மா...!!!
*
அம்மா காத்திருந்தாள்
அம்மா வலித்தாள்
அம்மா பொறுத்துக்கொண்டாள்
அம்மா பிறசவித்தாள்
இரத்தமும் சதையுமான என்னை
அம்மா கட்டி அணைத்தாள்....!!!!
.
அம்மா வெட்கப்படுவாள்
அம்மா வேதனிப்பாள்
அம்மா தன்னையே வருத்திக்கொள்வாள்
அம்மா அசாதாரணங்களை வென்றெடுப்பாள்
அம்மா கண்ணீரோடு புன்னகைப்பாள்
அம்மா தன்னை அரவணைக்க கேட்கமாட்டாள்...!!!!
.
அம்மா ஆவென்பாள்
அம்மா கையசைப்பாள்
அம்மா என்னைப்போலாவாள்
அம்மா எனக்காக மட்டும் தலையசைத்து ஆடுவாள்
அம்மா நடை பயில்வாள்
அம்மா நடக்கச்சொல்வாள்...!!!
.
அம்மா ஒளிந்து கொள்வாள்
அம்மா கண நேரம் கூட எனை தேடவைக்காமல்
அம்மா முன்னால் வந்து சிரிப்பூட்டுவாள்..
அம்மா ஆனந்தம் தருவாள்
அம்மா அமுதூட்டுவாள்
அம்மா அடம் கொள்ளமாட்டாள்...!!!
.
அம்மா நிலவை வாங்குவாள்
அம்மா இலைகளை திட்டுவாள்
அம்மா அழகாய் இருப்பாள்
அம்மா அன்பானய் இருப்பாள்...!!!
.
அம்மா...
நான் அழுவேன்
அம்மா சிரிப்பதற்காகவல்ல
அம்மா அழுவாள்
நான் சிரிப்பதற்காக....
நான் தூங்கும்போது
அம்மா தூங்கமாட்டாள்....
அம்மா நித்திரையின்றி துயிலெழுவாள்..!!!!
அம்மா தவமிருப்பாள்
அம்மா தரம்பிரிக்காள்...
அம்மாவை வீசாதீர்...
அம்மாவை தூற்றாதீர்
அம்மாவை திட்டாதீர்
அம்மாவை மறவாதீர்...!!!
எவ்வளவு ஏசினாலும் நம்மை
தூக்கி வீசாத நம்மை விட்டுக்கொடுக்காத
ஒரே ஒரு ஜீவன் அம்மா...
.
இன்று நம்மால் எழிதில் தூக்கி வீசப்படும்
ஒரே ஜீவனும அம்மாதான்...
.
இரவுகள் காத்திராத காலம் வரை
தன் பிள்ளைக்காய் காத்திருப்பாள்...
.
அம்மா அரசாளும் வரையில்தான்
அன்பு அரசாளும் - அதனால்
மற்றவர்கள் அன்பெல்லாம் சும்மா
என்றில்லை அவை
அம்மாவின் அன்புக்கு நிகரற்றது....
.
பாலில் துவங்கி தன் பாதத்தில்
வைத்துள்ளாள் அம்மா சுவர்கம் - பாதியில்
துவங்கி மீதியைத்தான்
தருவாள் மனைவி...
.
நம் நீணடதொரு வாழ்க்கைப்
பயணத்தில் அவளே நிஜமானவள்
அவளல்லாதவையெல்லாம்
அவளின் நிழலாய்....
.
அம்மாவை
வெறுப்பவர்கள் நீதமாகிகொள்ளுங்கள்
அனுப்பியவர்கள் அழைத்துவாருங்கள்
அனுப்ப நினைப்பவர்கள்
அரவணைத்துக்கொள்ளுங்கள்...
அம்மா...ஒரே மொழி....
இயலாதோர் என்னிடம் கொடுத்து விடுங்கள்....