படித்த கவிதைகளின்
வார்த்தைகளை
கடமெடுத்து நானே
புனைந்துகொண்டேன்
புதியதோர் பதியம்
கவிதை எனச்சொல்லி
வீதியில் வீசி எறிந்தேன்
சிலதை வாசித்தனர் - அதில்
சிலதை நேசித்தனர்
இன்னும் சிலதை
அங்கேயே அநாதையாய்
விட்டுச்சென்றனர்...
நான் பொறுக்கி
எடுத்து கோர்த்துக்கொண்டிருக்கிறேன்...