Author Topic: கண்ணீரின் பிசுபிசுப்பு  (Read 805 times)

Offline Guest

அன்பு அதிகாரம் செய்யும் அழகான இதயத்திற்கு..

வீழ்த்தி போன பெருந்துரோகமும், உதாசீனம் செய்த நிராகரிப்புகளும்
உன் கண்ணீர் துளிகளின் உப்புக்கரிப்பை சுவைக்காமலே கடக்கட்டும்...

உன் காயங்களுக்கென மருந்திட...
தனிமையும்,
தனிமையில் கண்ணீர் துடைத்த கைவிரல்களும்,
'இத்தனை தாண்டியும் வீழாத பலம்'
என கண்ணாடி பார்த்து சிரித்த உலர்ந்த உதடுகளும்,ஈரக்கண்களும் போதுமானதாய் ஆகட்டும்.

நமக்கான பேரன்பை நாம் உணராமல் தொலைந்த / தொலைத்த பேரிழப்பை அறியும் நொடியினில் மட்டும்
 கண்ணீர் உலர, வீங்கிய கண்களோடு அழுது தீர்த்திடு...

 நம்மை நேசித்த இதயங்களுக்கு மட்டும் உரித்தாகட்டும் நம் கண்ணீரின் பிசுபிசுப்பு..
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ