பத்தே பத்து நாட்கள் தான் பதிக்கவில்லை
புதிதாய் ,பதிலாய் பதிப்பு ...
பித்தே பித்து பிடித்தவன் போல் சித்தம்
முழுதும் சத்தமாய் பெரும் தவிப்பு
அறிந்தே ,பதிப்புக்களை பதிக்கவில்லையே தவிர
பதிந்த பதிப்புக்களை ஒரு நாளும் படிக்க மறந்ததில்லை
பதிப்புகளை பதிப்பதற்க்கு புத்தம் புதிதாய்
பல புதுமுகங்கள் ,ஆரோக்கியமான வளர்ச்சிதான்
அத்தனை பேர் அழகாய் வரி பதித்தும் கூட
கவிச்சோலையில் நல்வரிகளின் வறட்சி ஏன் ??
எத்துனைதான் வரி பதிந்தும், அதை எத்துனை முறை படித்தும்
தெள்ளதெளிவாய் தெரிகிறதே தரத்தின் தளர்ச்சிதான்
ஒருவேலை மறுசுழற்சியின் மறு பிரவேசத்தில்
பெறக்கூடுமோ ? அரும் , நறும் மறுமலர்ச்சிதான் ?
காத்திருப்போம், காத்திருப்போம்
கவிச்சோலையில் வரும் காலத்தில் குறிபிட்டதோர்
அரும் கிளர்ச்சி ,தோன்றினால் பெரும் மகிழ்ச்சிதான் .....