Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
குருதியில் கரைகிறது நாளையத் தலைமுறை !!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: குருதியில் கரைகிறது நாளையத் தலைமுறை !! (Read 1377 times)
ரித்திகா
Forum VIP
Classic Member
Posts: 4585
Total likes: 5312
Total likes: 5312
Karma: +0/-0
Gender:
‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
குருதியில் கரைகிறது நாளையத் தலைமுறை !!
«
on:
March 06, 2018, 09:06:23 AM »
மனிதனே உறங்கிவிட்டாயோ !!!
மனித நேயமதனை
மொத்தமும் தீயில்
போட்டு கொளுத்தி விட்டாயோ !!!
இல்லை எவனுக்கு
என்ன வந்தது என்று ஒதுங்கிவிட்டாயோ !!!
பிஞ்சு குழந்தைகளின்
சிரிப்பொலிகள்
ஓலமென மாறிவிட்டதே ...
மனிதனே அதனைச் சற்று
செவிமடுத்தாயோ !!!
இன்று பூத்த மலர்களாய்
ஓடி திரிந்த பச்சிளங்கள்
முகத்தில் வேர்வைக்கு பதில்
குருதி வழிகிறதே
அதை காணத் தவறினாயோ !!!
நீர் சூழ்ந்திருக்கும் இவ்வுலகமதனில்
ஒரு நாடு மட்டும்
குருதி ஆற்றினைச் சுமந்து
முற்றில்லாமல் கரைக்கடந்து ஓடுகிறதே ...
அதை அறியவும் மறந்தாயோ !!!
சிரம்தனை உயர்த்தி
சிசு விழி விரிக்கிறது ...பயத்தினால் அல்ல ..
ஒரு கரம் கொண்டு வாரி அணைத்திட
மாட்டாயா என்று ...!!!
ஒரு கணம் உன்னைச்
சொந்தமென நினைத்ததன் பாவம்
வினாடியில் சிசுவின் சிரத்தைத்
தோட்டாக்களினால் பதம்பார்த்துவிட்டாயோ ...!!!
இறந்த உயிர்களுக்கு
கண்ணீர் சிந்த இயலாமல் ...
இருக்கும் உயிர்களைக்
காக்கும் வழி அறியாமல் ..
துடிக்கும் இதயங்கள் எத்தனை!!!
உண்ண உணவின்றி ..
உறங்க நிம்மதியின்றி ..
இருக்க இடமின்றி ...
ஓடி ஒழிந்த ஓய்ந்த
அழுகுரல்கள்தான் எத்தனை ..!!
வளம்கொண்டு நீ வாழ ..
வளரும் பிள்ளைகளைப்
பணயம் வைப்பது முறையோ !!!
இல்லம் நிறைந்த நிலம்
இன்று சுடுகாடாய் மாறிவிட்டதே ...
இது மனிதனின் சுயநலத்தால்
வந்த வினையோ ...
ஒன்றுமறியா உயிர்களைப்
பலிகொடுத்து ...
சொந்த பூமியதனை ரத்தத்தில்
சுழவைத்து ..
எதனை ஆழப்போகிறாய் மனித ...
சிதறி கிடக்கும்
பிணங்களையும் பீடங்களையுமா ..?!!
தாய் தந்தை
உடன் பிறந்தோர் அனைவரையும்
இழந்து சிறுவன் ஒருவன்
உயிர் தப்பித்தால் ...
அவனது எதிர்காலம் அது
எவ்வாறு இருக்கும் ...?!!
தனிமையில் வளரும் அவன்
வழிகாட்டலின்றி தீய வழியினில்
அகப்படுவானா ...
தீவிரவாதத்தில் தீவிரம் கொள்வானா ...
இன்று லச்சக்கணக்கில்.....
நாளைக் கோடிக்கணக்கில்
உயிர்களை இவன் சூறையாடுவானா ....!!!
பிஞ்சின் மனதில்
நஞ்சினை ஊற்றி
வஞ்சம்தனை வளர்த்துக்கொள்ளுமா
சிரியாவின் நாளையத் தலைமுறை ...
இதற்கு முற்றென்பதே இல்லையா ...
மனதினில் ஈரமது துளியுமில்லையா ..
மனிதாபிமானம் மனிதர்களிடையே
மிச்சமீதமில்லையா ...
குருதியில் கரைகிறதே
சிரியாவின் தலைமுறை ..
விதிதான் இதற்கு
வழி சொல்லுமோ ...அல்ல
வருந்துவோர்க்கு ..
மறதிதான் மருந்தென்று சொல்லுமோ ...
வெள்ளை மலரில்
ரத்தக்கறைப் பதிந்துவிட்டதே...
மழைத்துளிகள் கூட்டமென வந்து
கறைதனைப் போக்குமா...
மழலைகளைக் காக்குமா ...
இல்லை மாரி வருவதற்குள்
மலர் அது வாடிவிடுமா ..?!!
விடை தெரியா வினாக்களுடன்
துப்பாக்கி முனையில் சிரியா !!!!
«
Last Edit: March 06, 2018, 12:46:50 PM by ரித்திகா
»
Logged
(8 people liked this)
(8 people liked this)
joker
SUPER HERO Member
Posts: 1161
Total likes: 3934
Total likes: 3934
Karma: +0/-0
முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: குருதியில் கரைகிறது நாளையத் தலைமுறை !!
«
Reply #1 on:
March 06, 2018, 11:24:30 AM »
சகோ
நிதர்சனமான வரிகள்
விதிதான் இதற்கு
வழி சொல்லுமோ ...அல்ல
வருந்துவோர்க்கு ..
மறதிதான் மருந்தென்று சொல்லுமோ ...
தொடர்ந்து எழுதுங்கள் nandri
நன்றி
****ஜோக்கர்****
Logged
(2 people liked this)
(2 people liked this)
"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "
ரித்திகா
Forum VIP
Classic Member
Posts: 4585
Total likes: 5312
Total likes: 5312
Karma: +0/-0
Gender:
‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: குருதியில் கரைகிறது நாளையத் தலைமுறை !!
«
Reply #2 on:
March 06, 2018, 11:54:42 AM »
ஜோக்கர் சகோ ,
நேரமோதிக்கி
கவிதையினைப் படித்து
வாழ்த்தியமைக்கு நன்றி !!!
Logged
(2 people liked this)
(2 people liked this)
SaMYuKTha
FTC Team
Hero Member
Posts: 542
Total likes: 1644
Total likes: 1644
Karma: +0/-0
Gender:
!~பலம் பெற விரும்பினால் பலவீனம் பகிராமலிருங்கள்~!
Re: குருதியில் கரைகிறது நாளையத் தலைமுறை !!
«
Reply #3 on:
March 06, 2018, 04:57:31 PM »
கவிதை மிக அருமை ரித்தி மா..
உங்கள் மனதை அமிழ்த்திய பாரத்தை ஆதங்கமாக உங்கள் வரிகளில் கொட்டி விட்டீர்கள் ..
துப்பாக்கி முனையில் பரிதவிக்கும் சிரியாவின் குரலாக ஒலிக்கும் உங்கள் கவிதை மனதை துளைக்கிறது... நன்றி ரித்தி மா..
Logged
(3 people liked this)
(3 people liked this)
JeGaTisH
SUPER HERO Member
Posts: 1493
Total likes: 2495
Total likes: 2495
Karma: +0/-0
Gender:
Re: குருதியில் கரைகிறது நாளையத் தலைமுறை !!
«
Reply #4 on:
March 06, 2018, 07:54:25 PM »
வாவ் ரித்திகா அக்கா கவிதை அருமை
நீர் சூழ்ந்திருக்கும் இவ்வுலகமதனில்
ஒரு நாடு மட்டும்
குருதி ஆற்றினைச் சுமந்து
முற்றில்லாமல் கரைக்கடந்து ஓடுகிறதே ...
அதை அறியவும் மறந்தாயோ !!!
அருமையாக இருக்கிறது ஒவ்வொரு வரிகளும்.....
கவிதைகள் தொடரட்டும்.
Logged
(3 people liked this)
(3 people liked this)
NiYa
Hero Member
Posts: 546
Total likes: 1077
Total likes: 1077
Karma: +1/-0
Gender:
உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: குருதியில் கரைகிறது நாளையத் தலைமுறை !!
«
Reply #5 on:
March 10, 2018, 12:23:59 PM »
கவியின் தலைப்பே கவியின்
மையத்தை சொல்லிவிடும்
உங்கள் உணர்வுகளை
உணர்வுபூர்வமாக வடித்திருக்கிறீகள்
கண்களை கலங்க வைக்கும் வரிகள்
அருமை தோழி
Logged
(4 people liked this)
(4 people liked this)
VipurThi
Hero Member
Posts: 879
Total likes: 1615
Total likes: 1615
Karma: +0/-0
Gender:
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: குருதியில் கரைகிறது நாளையத் தலைமுறை !!
«
Reply #6 on:
March 11, 2018, 12:09:19 AM »
Rithi baby
romba azhaga eluthirukama ana enga podanumo anga vituta
itha aprm pathukuren
really romba feel pani solliruka (H)
உண்ண உணவின்றி ..
உறங்க நிம்மதியின்றி ..
இருக்க இடமின்றி ...
ஓடி ஒழிந்த ஓய்ந்த
அழுகுரல்கள்தான் எத்தனை ..!! inaiku nadanthutu irukira nilamaya sariya solliruka baby
ungal kavi payanam thodara vaazhthukal baby ma
Logged
(4 people liked this)
(4 people liked this)
print screen windows 7
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
குருதியில் கரைகிறது நாளையத் தலைமுறை !!