நீ எழுந்து போய்
நெடு நேரம் ஆகியிருக்க வேண்டும்
இளம் மஞ்சள் வெயிலின் வருகைக்கு பின்
நிகழ்ந்தது உன் வருகை ...
இப்பொழுது பூக்கள் மலர்ந்து விட்டன
அதன் இதமான வாசனை என்னை எழாமல்
கட்டி போட்டுருக்கிறது
நிஜம்தானா இது
பூக்கள் இப்பொழுதுதான் மலர்க்கின்றன
நானோ அதற்கு முன்பிருந்தே இப்படித்தான் இருக்கிறேன்
நீ வந்து போகின்ற ஒவொவ்ரு முறையும்
வாழ்வை திசை மாற்றித்தான் போகிறாய்
எப்பொழுதும் அதிக ஆரவாரமில்லாமல்
ஒரு பூ மலர்வது போல்தான் நிகழ்கிறது உன் வருகை
இந்த தினத்தில் வருவாயன்றோ
இந்த நேரத்தில வருவாயன்றோ
குறிப்பிடு சொல்லி விட முடியாது
நாளையோ நாளை மறுதினமோ அல்லது
அடுத்த மாதமோ நடக்கும் உன் மறு பிரவேசம்
அது வரை எதிர்பார்ப்பிற்கும்
ஏமாற்றுத்திற்குமான இடைவெளியில்
காலம் கழியும்
நினைத்த போதெல்லாம்
வருவதில்லை தான் மழை
என்றாலும் பொழிகின்ற பொழுது
மறுக்கவா முடிகிறது
அப்படிதான் ஏற்றுக்கொள்ளப்படுகிறது
உன் வருகையும்
எப்பொழுதும் நீ ஒரு மழைதான்
நினைத்த பொது வராததில் மட்டுமல்ல
ஒவ்வொரு முறையும் ஒரு பூந்தூறலாய்
பொழிவாய்
சாரலாய் மாறி சட சடவென்று அடிப்பாய்
உற்சாகம் பொங்க
வானத்திற்கும் பூமிக்குமாய்
நிறைவாய்
குளிர குளிர கொட்டுவாய்
சிறிது நேரத்தில் எல்லாம் ஓய்ந்து
அமைதியும் குளிர்ச்சியும் மட்டுமே
நெடுநாள் வரை நினைவிருக்கும் -
அந்த அன்பின் ஆவேசமும் அப்படித்தான்
புதிதாக அறிமுகமான ஒருவருக்கு
நெருக்கமா மனிதனாக
நிமிடத்தில் மாறிவிடுகிறேன்
பரிச்சியமற்ற எத்தனையோ
மனிதர்களையும் சூழ்நிலைகளையும் கூட
எளிதில் பழகி கொள்கிறேன்
பழகிய உன்னிடம்தான்
இதனை தவிப்பும் தடுமாற்றமும்
நீ போன பின்னால் கூட எதுவும் சிந்திக்க முடியவில்லை என்னால்
இதான் காதலா ......