Author Topic: என்னுள் இணைந்த என் ஆறுயிரே  (Read 1139 times)

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
என்னுள் இணைந்த என் ஆறுயிரே

காதல் எனக்கும் வருமா என்று
இப்போது நினைத்தாலும்
மர்ம  புன்னகை பூக்கின்றது
வானில் தேவதை வருவாளா
என் தோல் சேர்வாளா என்று
நான் கண்ட கனவுகள் யாவும்
வார்த்தைகளில் வர்ணிக்கமுடியாது

கைக்கோர்த்து செல்லும் ஜோடிகளை
நான்  சுட்டெரிப்பது  போல் பார்த்த
நாட்களும் கோடி
அதை இப்போது நினைத்தாலும்
நானா செய்தேன் என
எனக்குள்ளே சந்தேகங்கள் பல

பெண்கள் என்னை
கடந்து செல்லும் போதெல்லாம்
இவள் என்னவளோ  என்று
மனசு ஏங்கும் அதற்கு
பலனாய் நீ கிடைத்தாய்
நளினத்தின் உருவமாய்
அழகுக்கு பொருளாய்
வானத்திலிருந்து   இறங்கிய
தேவதை போல்

உன் விரல் பிடித்து
நான் அணிவித்த மோதிரம்
மூன்று முடிச்சு தாலிக்கு சமம்
நீ அணிந்திருந்த நீல நிறமே
இப்போது என்னக்கும் பிடித்த
வர்ணமாகி விட்டது
உனக்கு பிடித்த அனைத்தும்
இனி எனக்கும் பிடிக்குமே

அந்த நீல வானத்தின் சாட்ச்சியாக
அக்னியின் சாட்ச்சியாக
என்றுமே நீ எனக்கு மட்டுமே
உன் கை பிடித்து செல்லும் பாதை
பாலைவனமாக இருந்தாலும்
அது எனக்கு என்றும் சொர்க்கமே
என்னுள் வாழும் உனக்காக
இது சமர்ப்பணம்
                               
                                         Ram5


Offline SweeTie

Re: என்னுள் இணைந்த என் ஆறுயிரே
« Reply #1 on: February 18, 2018, 05:39:10 AM »
காதல் வந்தால் கவிதை வரும்.   அப்டியே  உங்களுக்கும் காதல் வந்துவிட்டது என்பது இப்பொது உண்மை.   வாழ்த்துக்கள் .   உங்கள் தேவதை மிகவும் பாக்கியசாலி.  தேவதைக்கு   உங்களுக்கும்  நல்வாழ்வு   பெற என்றென்றும்  வாழ்த்துகிறேன்.

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: என்னுள் இணைந்த என் ஆறுயிரே
« Reply #2 on: February 19, 2018, 12:15:02 PM »
மோதிரம் அணிவித்த நாள் முதல்
தாலி கட்டும் நாள் வரை காதலின் ஒரு முக்கிய அத்தியாயம்

அதில் உணர்ந்து கொண்டதை வாழ்வில் கடைசிவரை கடைபிடித்தால் வாழ்வு சிறக்கும்

அருமையாக தங்கள் எண்ணங்களை கவிதையாக கொடுத்தமைக்கு நன்றி ராம்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "