Author Topic: ஜோக்கரின் குறுந்தகவல்  (Read 74821 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #150 on: July 17, 2025, 02:19:20 PM »
மெல்ல ஊதி ஊதி ,
அழகான பலூனை
மேலும் அழகாக்க நினைத்து
உடைத்தெறியும்
மழலை மனம் போல
பிடித்தவர்களிடம்
அன்பை
கையாளும்
நாம்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #151 on: July 18, 2025, 05:38:29 PM »
யாரேனும்
நலம் விசாரித்தால்
ஒரு நொடி என்னுள்
தடுமாற்றம் !!
சில திணறலோடு ...
என்னை நானே தேற்றி
"நான் நலம்" என்னும்
முகத்திரையோடு
அந்த உரையாடலை முடிக்கிறேன்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #152 on: July 22, 2025, 12:26:23 PM »
எல்லா உறவுகளுக்கும்
ஏதாவது
பெயர் வைத்தே
ஆகவேண்டுமா என்ன !!

அந்த இருவருக்கு மட்டும் புரிந்தால்
போதாதா ?

இங்கு
சில பெயரில்லா
அழகிய உறவுகளும்
இருந்துவிட்டுப் போகட்டுமே !!

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #153 on: July 24, 2025, 01:47:21 PM »
பரவாயில்லை
அன்பு  செலுத்துங்கள்
என்ன நடந்துவிடபோகிறது !
மீண்டும்
ஒரு மழை!
பெரு வெள்ளம் !
சிறு கண்ணீர்!
இருக்கட்டுமே
அது தானே
இந்த அற்ப வாழ்க்கையின்
அதீத அர்த்தம்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #154 on: July 28, 2025, 02:01:55 PM »
நீங்கள் யாரையும்
வெறுக்க வேண்டிய
அவசியம் உங்களுக்கு இல்லை
பிடிக்கவில்லை என்றால்
அமைதியாக
விலகி விடுங்கள்

ஏனென்றால்
நிம்மதி
மிக முக்கியம்
உங்கள் வெறுப்புக்கு
முதலில் பலி ஆவது
உங்கள் நிம்மதி மட்டுமே !!

சிந்தித்து செயல்படுங்கள்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #155 on: August 06, 2025, 12:01:06 PM »
கடல் பெரியது தான் ,
ஆனால்
சந்தோஷங்கள் தருவது என்னவோ
சிறு சிறு அலைகள் தான்.
ஆகையால் காணுவதை காட்டிலும்
கிடைப்பதை கொண்டு
மகிழ்ச்சியாக வாழ பழகுவோம்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #156 on: August 07, 2025, 12:15:12 PM »
தேவையில்லாத
கேள்விக்கு
தெளிவான பதில்
"மௌனம்"
இந்தத் சூழ்நிலைக்கும்
சிறந்த பதில்
"புன்னகை"

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #157 on: August 08, 2025, 05:40:59 PM »
எத்தனை அதிகமாக
நெய்யை  ஊற்றினாலும்
தீபம் தானாக எரிவதில்லை
அதை பற்ற வைக்க
வேறொரு நெருப்பு
தேவைப்படுகிறது
அந்த நெருப்பின் பெயர் தான்
"அனுபவம்""

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #158 on: August 11, 2025, 02:42:39 PM »
யானைக்கு கரும்பு தோட்டமே தேவைப்படுகிறது.
எறும்புக்கு சக்கையே போதுமானதாக இருக்கிறது.
தோட்டம் கிடைக்கும்போது
யானையை இரு..
சக்கை கிடைக்கும்போது
எறும்பாய் இரு..
வாழ்க்கையில் திருப்தியில்லை என்ற
பேச்சுக்கே இடமிருக்காது.

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #159 on: August 12, 2025, 02:02:36 PM »
மண்ணில் மண் என எழுதுவது சுலபம்
ஆனால்
நீரில் நீர் என எழுதுவது கடினம்!
உறவிற்கு இதற்கும் தொடர்புண்டு
உறவை உருவாக்குவது மண்ணில்
எழுதுவது போல எளிது
உறவை காப்பது நீரில் எழுதுவது போல
மிக கடினம் .

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #160 on: August 18, 2025, 12:11:36 PM »
பலம் இருக்கு என்பதற்காக
எதிரியையும்

பணம் இருக்கு என்பதற்காக
செலவையும்

உருவாக்கி கொள்ளாதே

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #161 on: August 22, 2025, 01:45:59 PM »
உயர பறக்கிறது என
பருந்து பறவையை விரும்புவரைவிட
அருகில் பறந்து கையில் வண்ணத்தை விட்டு
செல்லும் பட்டாம்பூச்சி யை
விரும்புபவர்கள் அதிகம்

எப்போதும்
உயரத்தில் இருக்க வேண்டிய
அவசியமில்லை
அருகில் இருந்தாலே
சில நேரங்களில்
போதுமானது

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #162 on: August 30, 2025, 12:33:24 PM »
எல்லாம் புரிந்த எனக்கு
என் மனதிற்கு
புரியவைக்க முடியவில்லை

மனதிற்கு புரியவைத்தல்
என்பது அவ்வளவு எளிதல்ல
நடந்தவைகளுக்கும்
நடந்திருக்க
ஆசைப்பட்டவைகளுக்கும்
நடுவே மாட்டிக்கொண்டு
மனம்படும் வேதனையை
வார்த்தைகளில்
கொட்டிவிட முடியாது ..

அனைத்திற்கும்
அப்பாற்பட்டதே
மனங்களின் தவிப்புகள் ...

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #163 on: September 16, 2025, 08:26:06 PM »
விரும்பிய வாழ்க்கை
எல்லோருக்கும் கிடைப்பதில்லை
ஆனால்
கிடைத்த வாழ்க்கையில்
நம்முடைய சந்தோஷங்களை
சேர்க்க முயன்றால் போதும்
பின்னர் அந்த வாழ்க்கை
நம்மையே அறியாமல்
நமக்கு பிடித்ததாக மாறிவிடும்…!!

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ஜோக்கரின் குறுந்தகவல்
« Reply #164 on: October 22, 2025, 12:59:06 PM »
நீங்கள் எத்தனை முறை
உடைந்தீர்கள் என்பது தெரியாது ...
ஆனால்
அத்தனை முறையும்
உங்களை கைதூக்கிவிட
யாரோ ஒரு சரியான நபரை
இப்பிரபஞ்சம் அடையாளப்படுத்தும்
உங்களுக்காக

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "