Author Topic: சிதைந்து போகிறது இதயம்  (Read 571 times)

Offline சாக்ரடீஸ்

சிதைந்து போகிறது இதயம்
« on: January 21, 2018, 09:17:21 PM »
வாய் பேசும் மொழி மறந்து
மௌன மொழி பேசுகிறது ...
தன்னை சுற்றி இருப்பதை
ரசிக்காமல் மறந்து கண்ணீரை
வடிக்கிறது கண்கள் ...
சில்வண்டுகளின் ரிங்காரம் கேளாமல் ...
மரண ஓலத்தை கேட்கிறது செவிகள் ...
கனவுகள் காணமல்
பார்வை இழக்கிறது கண்கள் ...
சிறகடித்து பறக்காமல் ...
சிதைந்து போகிறது இதயம் ...
உன்னை காணமல் ...