Author Topic: உயிர் கொல்லும் தகாத காதல்  (Read 590 times)

Offline thamilan

எயிட்ஸ்
இது விற்பவரும் வாங்குபவரும்
நஷ்டப்படுகிற  ஒரு
விசித்திர வியாபாரம்

காலனுக்கான காமனின்
அன்பான அழைப்பிதழ்
சிலரால் அஞ்சல் செய்யப்படும்
அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்படும்

ஒன்றும் ஒன்றும் இரண்டு
இது கல்விக்கான கணக்கு
ஒன்றும் ஒன்றும் மூன்று
இது  கலவிக் கூட கணக்கு
ஒன்றும் ஒன்றும் பூஜ்யம்
இது  கடவுள் போடும் கணக்கு

பலபேரை தழுவிய வேசி
கொதிநீரைத் தழுவாத ஊசி
சோதிக்கப்படாமல் எடுக்கப்படும் ரத்தம்
காயப்பட்ட இதழ் சிந்தும் முத்தம்
இவையே எய்ட்ஸ்சின்  இலக்கு
நமக்கேன்  இது விலக்கு

இளைஞனே  நீ
நீ இராமனாயிருந்தால்
காத்திருப்பது சீதை
காமனாய் நீயிருந்தால்
காத்திருப்பது சிதை

பத்தினி வரும் வரை
பட்டினியோடு இருந்திட்டு
அடங்காப்பசியா.....?
ஆணுறையாகிலும்  அணிந்திடு

கண்ட கண்ட மெய்யெழுத்துக்களோடு
கலந்ததில் உருவாகிக் கொண்டிருக்கும்
சில உயிரெழுத்துக்கள்  குற்றெழுத்தாய்
குருகிக் கொண்டிருக்கின்றன
அவைகளை நோக்கி
ஆயுத எழுத்துக்களை அல்ல
ஆறுதல் எழுத்துக்களை நீட்டுவோம்