Author Topic: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)  (Read 3740 times)

Offline Forum

பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2018)

நண்பர்கள் கவனத்திற்கு,
 எதிர் வரும் பொங்கல் தினத்தை முனிட்டு .. சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் கவிதைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் ... நண்பர்கள் இணையதள வானொலியூடாக உங்கள் கவிதைகள் பொங்கல் தினத்தன்று தொகுத்து வழங்கப்படும். எதிர்வரும்  புதன் கிழமை   (10-01-2018) இந்திய நேரம் இரவு 12 மணிக்கு  முன்பாக கவிதைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சொந்தமாக எழுதப்படும் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.

Offline Mr.BeaN

      கதிரவன் வீச ஒளிரும் உலகில்...
      நெற் கதிரின் ஓசை ஒலிக்கும் நாளே!!!
    நதிகள் நடக்க தாங்கும் புவியில்...
    நம் கதியாய் இருக்கும் உழவின் நாளே!!!
    எங்கும் இன்பம் பொங்கும் என்றே...
    முச் சங்கம் கொண்ட தமிழின் நாளே!!!
    கரும்பின் சுவையில் நாளும் இனிக்க...
   தமிழ் சொல்லும் சுவையென உணர்த்தும் நாளே!!!
   மாடே எண்ணும் மடமை நீக்கி...
   மாடாய் உழைக்கும் உழவன் நாளே!!!
 காக்கை குருவி எங்கள் சாதி...
 பாரதி சொன்னதும் அன்றொரு நாளே!!!
ஆடும் மாடும் எங்கள் தோழன்...
என்றே கொண்டதும் இத்திரு நாளே!!!
மனிதம் போற்றும் தமிழன் அருமை...
இவ் வுலகிற்குணர்த்தும்
தை திருநாளே!!!!!   
     நண்பர்கள் அனைவருக்கும் என் உளம்கனிந்த தை திருநாளாம் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....

அன்புடன் பீன்...
[/b][/font][/size][/color][/center]
« Last Edit: January 09, 2018, 02:24:24 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean

Offline JeGaTisH

பொங்கலோ பொங்கல் தைப்பொங்கலு
தரணியில் தமிழர் பெயர் ஒலிக்க .

உலகுக்கு உணவை அளிக்கும்
உழவர்களின் உள்ளம் பொங்க.

இந்திரனை வேண்டி மழை தருவிக்க மகத்தான நாள்
இரண்டு கொம்பு கொண்ட காளைகளை அடக்கும் நாள்.

ஐந்தறிவை கொண்ட ஜீவனோடு
ஆறுறிவை கொண்ட மனிதர்கள் கொண்டாடும் நாள்

பழைய பகையை தீயிலிட்டு
புதிய உறவை உயிரெல செய்.

தான் செய்த பலகாரத்தை தான் உண்டு பசியாறாமல்
இல்லாதா உறவுகளுக்கு கொடுத்து மனமாறு.

கரும்பு உண்டு கரைகளை கலுவிக்கொள்
மாவிலை தோரணம் போல் மனகசப்பை தொங்க விடு
வெடி போட்டு உன் வெறுப்பை விளக்கிவிடு

நல்லதொரு நாளில் நாடெங்கும் நல்லது பெருக
நம் கைகூப்பி கடவுளை பிராதிப்போம்.

இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் FTC.


« Last Edit: January 07, 2018, 08:38:10 PM by JeGaTisH »

Offline Ms.SaraN

சூரியன் ராஜ பார்வையோடு கிழக்கே உதிக்க
நெற் பயிர்  வெட்கத்தில் தலை கவிழ
சில்லென்று காற்று தீண்டிச் செல்ல 
விவசாயிகள் மனதில் ஆனந்தம் கூத்தாட
விடிந்தது தை மாதம் பொற்காலமாக

விவசாயிகள் முகமெல்லாம் பற்களாக
கையில் அரிவாளோடு வயலுக்குள் நுழைய
நெற் பயிர்  பயமில்லாமல்
அவர்களிடம் சரணடையத் தொடங்கியது
அழகிய நளின நடனத்தோடு

கைகள் இரண்டும்  சூரியனை நமஸ்கரித்து 
இனிதே  ஆரம்பமானது வேட்டை
மனதில் ஆனந்தம் பொங்க
முதல் பயிரை இறைவனுக்கு படைக்க
மூட்டையில் கட்டிக்கொண்டு   வீடு வர
வீடோ  திருவிழா கோலத்தில்

கரும்புகள் வாசலில் காவல் நிற்க
வாசலில் வண்ண கோலம் பளிச்சிட
மாவிலைகள் தோரணமாகத்தொங்க
மண் பானை விறகடுப்பில் கம்பீரமாக  அமர்ந்திருக்க 
பண்ணையில் கரந்த பால் பொங்கவா
என்று மிரட்டிக் கொண்டிருக்க

அரிசியை பானையில்  போட
பெண்கள் சுற்றி நின்று  கும்மி அடிக்க 
அழகாக பொங்கியது பொங்கல்
பிள்ளைகள் சந்தோஷத்தில்
பொங்கலோ பொங்கல் என கூச்சலிட
இனிதே ஆரம்பமானது தைப்பொங்கல்

பகைகள் மறந்து பங்காளிகள்  ஒன்று சேர
பலநாள் பட்டினியில் கிடந்த விவசாயிகளுக்கு
விருந்தோம்பல் நடக்க
ஒன்றாக அமர்ந்து பங்கிட்டு உண்டு
மனதில் மகிழ்ச்சி அலைகள் பொங்க
நன்றி கூறுகிறோம் கடவுளுக்கு
« Last Edit: January 10, 2018, 09:41:25 AM by Ms.SaraN »

Offline SweeTie

மஞ்சள் நீர் தெளிக்கட்டும் நம் குலப் பெண்கள்\
மங்கையர் போடட்டும் அழகழகாய்  கோலங்கள்
குருத்தோலைத் தோரணங்கள் தெருவெல்லாம் தொங்கட்டும்
மாவிலைத் தோரணங்கள் வாசலில் ஜொலிக்கட்டும்
வீடெங்கும் வீசட்டும்  மதுரை மல்லிகையின் வாசம் 

பதமான பச்சரிசி  பசும்பால் பயறு சேர்த்து
இதமான சூடேற்றி   சக்கரையும் சேர்த்து
இனிப்பான கரும்பு  முந்திரிகை  திராட்சை
மலைத்தேனுடன்  நெய்யோடு  வாசனையும் கூட்டி
செய்திடுவோம்  சுவையான தைப்பொங்கல் வாரீர்!!

பொங்கலோடு வடை  கொழுக்கட்டை பாயாசம் 
வகை வகையாய் செய்து வரிசையாய் அடுக்கிவைத்து
பலகார வகைகளுடன்  முறுக்கு லட்டு என்பனவும்   
முக்கனிகள் மா பலா வாழையும்  கூடவே  சேர்த்து
வருவோரை வரவேற்கும் தமிழர் கலாச்சாரம் பாரீர்!!

பட்டு வேஷ்டி சட்டையோடு  பாங்காய் நடந்துவரும்
அத்தானைப் பார்த்து  அழகு மகள் நாணட்டும்
அத்தை மகள் இவளோ  என  இச்சையுடன் பார்க்கும் அவன்
சொக்கித்தான் போகட்டும்   பெண் மயிலின் அழகினிலே
சக்கரை பொங்கலுடன்  அவர்கள் காதலும் பொங்கட்டும். 
fctc  இணையத்தின்  உள்ளங்களில்  மகிழ்ச்சியும்  பொங்கட்டும்

தித்திப்பான பொங்கல்  வாழ்த்துக்களுடன்  உங்கள் ஸ்வீட்டி
 

Offline Maran



FTC நண்பர்களுக்கு  என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.



Offline பொய்கை

வீட்டிலுள்ள  தேவையற்ற
பழசு எல்லாம்..
வீதியில கொளுத்தி
மாசு எல்லாம் ..
மூச்சு முட்ட
வைப்பதெல்லாம் ..
போகியின் சிறப்பல்ல...
தேவையற்ற எண்ணம்
மனதினில் விலக்கி
புதிய நல்லெண்ணம்
புகவைப்போம் போகியிலே!

காவிரியும் வைகையும்
கரை புரண்டு ஓடுகையில்
குருவையும் சம்பாவும்
கொஞ்சி விளையாடியதே..
கால்படி அரிசிக்கு கையேந்தி
நிற்கின்றார்..  இன்று
கடை கடையாய் அரிசி வாங்கி
கை காசு தொலைக்கின்றார்
சேற்றின்  மணத்தை போக்கி
சோற்றின் மணத்தை வீசவைக்கும்
தை பொங்கல் பொங்கலிட
விவசாயி நான் அழைக்கிறேன் ..
விவசாயம் காத்திடவே !

தொட்டிலில் பிள்ளை அழ
அதன் வயிற்றை நிறைத்த பசு
தொழுவத்தில் நிறைந்த காலம் ..
ஏரினில் மாடுகட்டி நிலமெல்லாம்
உழுதகாலம் பாரினில் வசந்தகாலம்..
ஜல்லிகட்டு காளை எல்லாம் எதிரிகளால்
துள்ளிக்கிட்டு ஓடுத்திப்போ
சகுனிகளைவிரட்டிடுவோம்!
தமிழன் என முழங்கிடுவோம் !

பொங்கலோ பொங்கல் !
பொங்கலோ பொங்கல் !


« Last Edit: January 08, 2018, 02:05:07 AM by பொய்கை »

Offline AnoTH



பசியாறும் பட்டணத்தார் நாமும்
பசியோடு ஒரு முறை இருந்தால் போதும்
பதறிடும்  வயிற்றின் குமுறலும்
எது கிடைத்தாலும் உண்ணத்  தோன்றிடும்

தன்னை வருத்தி வியர்வை சொரிந்து
தண்ணீர் துளியால் மணலை நனைத்து
பஞ்ச பூதங்களின் பலமாய் திகழ்ந்து         
புஞ்சை நிலத்தை உயிராய் நினைத்தான் 

அவன் நிலத்தில்
மலையைப்  பிளந்து மாளிகை கட்டி
மரத்தை வெட்டி மண் வளத்தை அறுத்து
களனி நிலங்களைக் கொள்ளையடித்து   
பல கொலனிகளைக் கூவி விற்றோம்

விலைவாசியால் விவசாயியை மறந்து 
பல விலைகளாயினும் ஆடம்பரத்தை மதித்து
ஆடம்பர வாழ்வால் அத்தியாவசியத்தைத்  தொலைத்து
பாமர மக்களின் வாழ்வை வேரோடு அழித்தோம்


உலகெங்கிலும் தமிழர் திருநாள்
உழவர் கொண்டாடும் வாழ்வில் அதுவே பெருநாள்
அவன் உழைப்பால் நாம் அடையும் கொண்டாட்டம்
அவன் இல்லையேல்  இனியெமது  வாழ்வில் திண்டாட்டம்

பிறக்கும் பொங்கலிலாவது
இனியொரு விவசாயி இறக்கக் கூடாது
அவன் பசியால் தவித்தால்
இனிதோர் பொங்கல் நிலைக்க மாட்டாது


உழவர் வாழ்வில் இன்பம் கரைந்திட
அவர்தம் உழைப்பில் மகிழ்ச்சி பொங்கிட
தாம் கடந்த துன்பங்கள் நீராவியாய்  நீங்கிட
பசியாற்றும் விவசாயியவன் வயிறு நிரம்பிட
இனிய பொங்கலாக இத்திருநாள் அமையட்டும்
« Last Edit: January 08, 2018, 06:17:03 PM by AnoTH »

Offline BreeZe



மலேசியாவில்  பிரீஸின்   பொங்கல்


நான் சொர்க்க வாசல்ல   
ஊஞ்சலில் ஆடியபடி இருந்தேன்
இதமான ஒரு கனா
திடீர்னு நேரம்  ஆகிடுச்சுனு ஒரு குரல்
அது என் சித்தியோட கனத்த  குரல்
என் கபாலத்தை
சுத்தியலால அடிக்குற மாதிரி
டொக் !  டொக் ! என்ற சத்தம்   ..

அந்த சத்தத்தில் அப்படியே
ஷாக் ஆகி எழுந்த இந்த பைங்கிளி
ஐயகோனு   முணு முணுக்க ..
வேறு  வழியே  இல்லாம  எழுந்து
குளித்து, புத்தாடை அணிந்து   
இந்த மதி முகத்தாள்
எல்லாருமே பொறாமை படுற அளவுக்கு
என்னை நானே அழகுபடுத்தி
என்னை  நானே கண்ணாடில  பார்த்து
முன்னும்  பின்னும்  ஒரு  லுக்கு விட்டு  ..
வாவ் அப்பிடி சந்தானம் ஷ்டைல்ல
சொல்லி  போகிறேன்  கீழ் அறைக்கு....

வீட்டுக்கு முன்னாடி  நேற்று
நான் கட்டின தோரணம் ஆட   ..
பொங்க வைக்க நான்  கட்டின  செங்கரும்பு ..
அழகு  சேர்க்க  மஞ்சள்கிழங்கும்   ...

பூஜைக்கு  ரெடி  பண்ணி  வச்ச
பழங்கள்  ஆப்பிள்  ஆரஞ்சு  கிரேப்ஸ்  ..
ஹ்ம்ம் கிரேப்ஸ்னாலே என் வாய் ஊறிடும் ..
ஆஹா என்ன  சுவை !
 அதை  அப்படியே அலேக்கா திருடி சாப்பிட்டு விட்டு
ஹலோ அப்புறம் என்ன பாஸ்னு
ஒன்னுமே  நடக்காத  மாதிரி
பழம் தட்ட  எடுத்து
பூஜை  அறையில்  வச்சு ..

அப்புறமா என்னோட  சித்தியோ
 விறகு  அடுப்பு  பத்த வைக்க  ..
பத்த வச்ச  உடனே  நாமெல்லாம்   கை தட்ட  .
மண்பானைய எடுத்து  வச்சு  பால்  ஊத்தி  ..
பால் பொங்குமா பொங்குமா
என காத்திருந்த நானோ
அந்த  பொங்கல் நுரை
அப்பப்போ பொங்குற மாதிரி
வெளிய வந்து புஸ் என்று உள்ளே போக
நானோ செம கடுப்பாகி விட .....

அப்புறம் என் சித்தி  கரும்பு   வெல்லம்   சேர்த்து
 அதை   கிண்டி  ஒரு பக்குவம்  வர
அதுல பாதாம்  முந்திரி  சேர்த்து
நெய் விட வாசம் மூக்கைத் துளைக்க
என்  மனமோ “ஐயகோ  எப்போபா  பொங்கல்  தயார் ஆகும்”
என ஏங்க…….

ஒரு வழியாக
பொங்கல்  தயார்  ஆக   
சூர்யா எனும்
சூரிய கடவுளுக்கு படையல் போட்டு
பூஜை  பண்ணி   கடவுளை வணங்கி
ஐயகோ அந்த   பொங்கல்
எப்போபா  சாப்பிட  தருவீங்கன்னு  கோபம் அடைய
(வெளில  கோபத்தை காட்டினா கண்டிப்பா
நமக்கு பொங்கல் கிடைக்காது ) ..ஆகவே
அத காட்டிக்காம சமத்தா நா இருந்ததால
 பொங்கல் சோறு சாப்பிடுங்கனு சொன்ன
அந்த ஒரு நொடி
அவ்வ்வ்வ்  எனக்கு பொங்கல் ரொம்ப பிடிச்சிருந்தது

கடைசியில  பொங்கல் வச்சி
சூரிய கடவுள வணங்கி
பொங்கல் சாப்பிடுற   சுகம்  இருக்கே
ஹ்ம்ம் சுவையின் உச்சம் ! ..

நன்றி சொல்லவேண்டும் விவசாயிகளுக்கு  .
அவங்க  இல்லன்னா .சோறு அரிசி இல்லாம   
பொங்கல் திருநாளே இல்லாம போய் இருக்கும்  ...
ஆகவே  வாங்க  நண்பர்களே  நாம எல்லோரும்
உழவருக்கும் கதிரவனுக்கும் எருதுகளுக்கும்
தலைவணங்கி நன்றி சொல்வோம்

« Last Edit: January 12, 2018, 01:50:24 PM by BreeZe »
Palm Springs commercial photography

Offline thamilan

உழவர் தம் மேன்மையை
உலகுக்கு சொல்லிடும்
தமிழர் தம் பெருமையை
தரணிக்கே சொல்லிடும்
திருநாளாம் இது பொங்கல் திருநாள்

உலகுக்கே ஒளி தரும் கதிரவனுக்கும்
மாடு போல உழைக்கிறான்  என
கடின உழைப்பிதற்கு
உதாரணமாக சொல்லும் எருதுகளுக்கும்
சேற்றில் விளைந்தாலும்
நெல்சோறு தந்து
மனித இனத்தைக் காத்திடும் நெற்கதிருக்கும்
தலைவணங்கி நன்றி சொல்லும்
நன்னாளாம் பொங்கல் இன்று

மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பொங்கி வரும் பொங்கலிது

பொலிவோடு பொங்கட்டும்
பொங்கல் இவ்வாண்டு
நிரந்தரமாய் தங்கட்டும்
நிம்மதி உழவர் தம்மோடு
 
பொல்லாத குணத்தை எல்லாம்
போகிதனில் போட்டு போசுக்கிடுவோம்
இல்லாத நற்குணங்களை
இரவல் வாங்கி சேமிப்போம்
உழவரின்றி உலகமே இல்லையென
உலகிற்கே உணர்த்திடுவோம்
கரும்பை மென்று துப்புவது போல
கவலைகளையும் துப்பிடுவோம்
தைமகள் பிறந்த நாளிது
தரணியெங்கும் போற்றிடுவோம்

உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்
அந்த உழவரை மதியாதோரை
நிந்தனை செய்வோம்
« Last Edit: January 10, 2018, 05:29:06 AM by thamilan »

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
ஆயிரம் கையுடயான் கண்
விழிக்கும் போதிலே
சேறுதனில்  ஏர் பூட்டி படியளக்கும்
உழவர் தைத்திரு நாள் இதுவே

கால நேரம் பார்க்காமல்
உழைத்திடும் இவர்களுக்காய்
நன்றி சொல்லிட நம்மவர்
தந்த நாள் இதுவே

புத்தாடை உடுத்தி
புதுப் பானை அடுக்கி
புத்தரிசி பொங்கலிட்டு
கொண்டாடிடும் நாள் இதுவே

அறுவடையின் ஒளியரசனுக்காய்
பொங்கி வழியும் பொங்கலதை
தலை வாழையிலை இட்டு பரப்பி
படைத்திடும் நாள் இதுவே

ஒரு சாண் வயிற்றுக்காய்
ஓடி ஓடி உழைக்கும் கரங்களில்
அள்ளி அள்ளி அன்னமிடும்
கரங்களை  மறவாது நாம் எண்ணி
கை கூப்பி நன்றி நவிலும்
நல்லதொரு நாளும் இதுவே


FTC நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும்
இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்


                               **விபு**