Author Topic: ரத்தத்தின் சித்திரமே!  (Read 676 times)

ரத்தத்தின் சித்திரமே!
« on: December 06, 2017, 06:46:41 PM »
தேவதை யாதென
காட்டிடவே!

தவழ்ந்திட கையிலே
நீ பிறந்தாய்!

பூக்களின் பாஷை கேட்டிடவே
புன்னகை சிந்தி பேசுகின்றாய்!

சாய்ந்தாடு என் தோள்களிலே!
சலிக்காதெந்தன் வான் நிலவே!

ரத்தத்தின் சித்திரமே!
முத்தத்தின் குத்தகையே!

கனவுகள் கோடியுடன்
கை பிடித்து நடந்து வா!!

மீண்டும்....
சக்தி ராகவா



Offline JeGaTisH

Re: ரத்தத்தின் சித்திரமே!
« Reply #1 on: December 06, 2017, 06:57:36 PM »
சக்திராகவா கவிதை அருமை ...

பூக்களின் பாஷை கேட்டிடவே
புன்னகை சிந்தி பேசுகின்றாய்!

ரத்தத்தின் சித்திரமே!
முத்தத்தின் குத்தகையே!


மிக மிக அற்புதம் ....கவிதைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்


Re: ரத்தத்தின் சித்திரமே!
« Reply #2 on: December 06, 2017, 07:08:35 PM »
நன்றி நட்பே!!