« on: December 06, 2017, 04:58:49 AM »
என்னை உன் சிரிப்பில் மயங்க செய்தாய்
ஆனால் உன் கண்களால் விழித்தேன்
பின்பு உணர்தேன் நீ வேறு
நான் வேறு அல்ல என ....
உன்னை கட்டியணைத்துக்கொண்டு
காலமெல்லாம் செல்ல காலன் வழிதருவனோ
காதல் செய்ய காலம் காத்திருக்குமோ
உருவமாக வந்தவள் உயிருடன் கலந்தால் ...
உன் கருவிழிகள் பேசும் வார்த்தைகளை
என்னை அன்றி யார் அறிவார்
என் இதயம் உன்னை என்னி துடிக்கிறதோ
அல்ல உன்னுடன் சேர துடிக்கிறதோ
உன் மார்பில் சாய்ந்ததும் அமைதியாகிவிடுகிறது ...
உன்னை என்னி என்னி என் மனம்
இப்போது உனதாகி விட்டது அன்பே
நான் காதலிக்கவில்லை ஆனால்
என்னையும் காதல் ஆழ்கிறது
« Last Edit: December 06, 2017, 05:00:21 AM by JeGaTisH »

Logged