கனவில் வந்தவள் என்னை கவர்ந்து
காதல் கைத்தடத்தை பதிந்து சென்றாள்
கனவில் வந்த கனவு தேவதை
கண் விழித்ததும் மறைந்து போனாள்
வந்தவள் தேவதையா அல்ல தேன்மொழியா
வந்தவள் என்னை பார்த்த படி நிற்க
நான் அவள் கரு விழியை உற்று நோக்கிய படி
அவள் மனம் என்ன நினைக்கிறதோ
அதை அவள் கண்களில் தென்பட்டது
அகத்தின் அழகு முகத்தில் தெரிய
ஆயிரம் ஜென்மமும் உன் மடி சாய
சொல்ல என் மனம் ஏங்கியது
கனவில் வந்தவளே என் கரம் பிடித்தால்
இப் பூமியில் என்ன விட அதிஷ்டசாலி எவருமில்லை
கனவு களைய கண்கள் திறக்க
காலை பொழுது விடிந்தது
கனவுக்கு மெய் அழகு
கவிதைக்கு பொய் அழகு