Author Topic: உன்னில் நான்  (Read 1172 times)

Offline thamilan

உன்னில் நான்
« on: November 02, 2017, 07:09:26 PM »
நீ பார்த்த பிறகு தான்
நான் அடிக்கடி
கண்ணாடி முன் நின்றேன்

நீ உச்சரித்த பிறகு தான்
என் பெயரே எனக்கு
பிடித்துப் போனது

நீ சிரித்த பிறகு தான்
என்னுள் சிறகுகள்
முளைத்திடக் கண்டேன்

நீ இயல்பானது தொட்ட பிறகு தான்
என்னுள் அனல் மின்நிலையம்
இருப்பதை அறிந்து கொண்டேன்

நீ பிரிந்த பிறகு தான்
செத்துக் கொண்டே
வாழவும் கற்றுக் கொண்டேன் 

Offline JeGaTisH

Re: உன்னில் நான்
« Reply #1 on: November 02, 2017, 08:05:47 PM »
வணக்கம்  தமிழன் அண்ணா
கவிதை பிரமாதம் ....
கவிதைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா

Offline thamilan

Re: உன்னில் நான்
« Reply #2 on: November 04, 2017, 09:17:36 PM »
நன்றி ஜெகா

Offline SweeTie

Re: உன்னில் நான்
« Reply #3 on: November 06, 2017, 07:18:45 AM »
இப்போ உங்களுக்கு அங்கே இருக்கும்  தாதிகளைப்  பார்க்கும்போது
இப்படித்தான் கவிதை  எழுத தோணும்.   பரவாயில்லை  கவிதை 
நல்லாத்தான் இருக்கு     தாதி  தான் பாவம்.    வாழ்த்துக்கள்

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1111
  • Total likes: 3749
  • Total likes: 3749
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: உன்னில் நான்
« Reply #4 on: November 06, 2017, 12:22:38 PM »
தமிழனின் தமிழ் கவிதை அருமை

"நீ இயல்பானது தொட்ட பிறகு தான்
என்னுள் அனல் மின்நிலையம்
இருப்பதை அறிந்து கொண்டேன் "

தூக்கத்திலே கரண்ட் வயர் தொட்டுடீங்கள் போல
பாத்துக்கோங்க   :D :D :D ;)

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: உன்னில் நான்
« Reply #5 on: November 17, 2017, 08:17:47 PM »
வணக்கம் சகோ ...

கவிதை அருமை ...
அழகிய வரிகள் ....

வாழ்த்துக்கள் ...
நன்றி ..!!!

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: உன்னில் நான்
« Reply #6 on: November 19, 2017, 02:22:35 PM »
நீ பிரிந்த பிறகு தான்
செத்துக் கொண்டே
வாழவும் கற்றுக் கொண்டேன் 

வர்ணிக்க வார்த்தை இல்லை அருமை