
நம்பிக்கை
*****************
வளர்ந்து விடுவோம் என்ற
நம்பிக்கையில் தான்
நிலா தேய்ந்து போகிறது!
மலர்ந்து விடுவோம் என்ற
நம்பிக்கையில் தான்
பூக்கள் உதிர்கிறது!
முளைத்து விடுவோம் என்ற
நம்பிக்கையில் தான்
விதைகள் மண்ணில் புதைகிறது!
இவைகளே நம்பிக்கையோடு வாழும் போது
மனிதா நீ மட்டும்
நம்பிக்கையை இழ்க்கின்ராய்
விழு எழுந்து விடுவோம்
என்ற நம்பிக்கையோடு!!!!
By
Bommi