அன்பே
என் இதயத்துச்சந்தங்களில்
உன் செவ்விதழ் பேச்சுக்கள்
உரசலுடன் சங்கமிக்கின்றன
அலையடித்து என்மனம் தத்தளித்த வேளை
அமைதியாய் என்னுள் வந்தவள் நீ
காதல் என்ற சொல்லுக்கு
இலக்கணம் தந்தவள் நீ
இன்பம் என்ற சொல்லுக்கு
அர்த்தம் கற்பித்தவளும் நீ
இன்று
இன்பங்களை உனதாக்கி
ரணங்களை எனதாக்கி
ரயிலேறிச்சென்று விட்டாய்
சேதி அறிந்து துடித்த எனக்கு
நட்பாகியது தலையணை.....
கண்மணியே !!! .......
காரணமற்ற காத்திருப்புகளை
காளை எனக்கு அளித்ததேனோ ?...
கண்ணே ............
விண்ணில் இருக்கும் நட்சத்திரம்
விண்ணுக்கு சொந்தம் - ஆனால்
விண்ணோ நட்சத்திரத்திற்கு சொந்தமில்லை இருப்பினும்
விண்ணாகிய உன்னை தேடிச்சொந்தமக்கும் முயற்சியில் நான் மட்டும் தனியே
ஒற்றை நட்சத்திரமாய் .......
Naan rasitha kavithai