Author Topic: ~ முத்து அடை ~  (Read 569 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227397
  • Total likes: 29050
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ முத்து அடை ~
« on: June 25, 2017, 08:56:04 PM »
முத்து அடை



தேவையானவை:

சின்ன ஜவ்வரிசி - அரை கப், பாசிப்பருப்பு - கால் கப், வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 3, அரிசி மாவு - 5 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - 100 கிராம், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

சின்ன ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்து மசிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். இவற்றை ஒன்றுசேர்த்து, இதனுடன் அரிசி மாவு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சம் நீர் விட்டு சற்றே கெட்டியாகப் பிசைந்து அடையாகத் தட்டவும். தோசைக் கல்லில் எண்ணெய்விட்டு, தட்டிய அடையைப் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து மெதுவாக இருபுறமும் வேகவிடவும். அழகிய, சுவையான முத்து அடை ரெடி.