மனம் விரும்பும் நட்புகளுக்கிடையே
எதற்கு மன்னிப்பு
கேட்டாயிற்று பல முறை சபையினர் முன்
கேட்காமல் போனதால் கவி நடையில்
மன்னிப்பு கேட்கும் உதடுகளுக்கு மேல் வழியும்
கண்ணீருக்கு தெரியும் மனதில் எவ்வளவு அனல் என்று
விலையில்லா உறவுகளுக்கு மன்னிப்பு என்னும்
விலை கொடுக்க முயற்சி
தெளிவு பிறந்திடும் வானம் தெளிந்திடும்
காத்திருங்கள் சகோ ...
கோபுரத்தின் உச்சியில் ஏறி நிற்பவர்
இறங்கி வருவார் நட்பின் அர்த்தம் புரிந்து
காத்திருங்கள்