Author Topic: பாவிகளே!  (Read 632 times)

Offline Yousuf

பாவிகளே!
« on: February 21, 2012, 05:57:20 PM »


தனிமையைப் போக்கி
வெருமையை நீக்கி-
வெற்றிடத்தை நிரப்பி
தாய்மை வரம் வேண்டியுருகும்
தாய்வயிற்றில் உருவாகாமல்

தத்தாரிகளாகத் திரிந்து
தாசிகளாய் அலையும்
தறுதலைகளின் வயிற்றிலா?
ஈறைந்து மாத
இருட்டறை சிறைவாசம்
கிடைக்கவேண்டும் எங்களுக்கு!

ஈன்றெடுத்த பந்தம்
தொடர்ந்துவிடுமென அறிந்து
தொட்டுக்கூட பார்க்காமல்
தொப்புள்க் கொடியையும் அறுக்காமல்
தூக்கி எரியப்படுகிறோமே!
துடிக்கும் உணர்வுகள் அடங்காமலே!

சிறைவாசம் நீங்கி
சிலிர்க்கும் தேகம்
சிலநொடிகளுக்குள்
சில்லிட்டு அடங்குகிறதே!
பனிக் குடத்தில் நீந்திய உடல்
சனிக் குளத்தில்
உயிருக்கு போராடியபடி!

சாதி சனமற்று
சமாதியாக வழியற்று
சாக்கடையில் மிதக்கிறதே!
எங்களின் உயிரற்ற உடல்
மானமிழந்தவர்களின் சந்ததிகளாய்
மரகட்டையானபடி!

பாவிகளே!
இரக்கமில்லையா?உங்களுக்கு
இல்லை
இதயமென்பதே  இல்லையா?
உங்கள் தேகத்துக்குள்!

இரக்கமற்ற அரக்கர்களே!
மனிதகுல துரோகிகளே!
நீங்கள் செய்யும் பாவத்துக்கு
தண்டனைகள் எங்களுக்கா!
மண்ணில் உலவும் மாபாவிகளே!



டிஸ்கி// என்னக்கொடுமையிது  முகநூலில் இந்தபோட்டோவைபார்த்ததும் மனம் சற்றுநேரம் விம்மி கரைந்து துடித்தது. இப்படியெல்லாம் கூட செய்வாங்களா பாவமல்ல இக்குழந்தைகள். என்ன மனித ஜென்மங்கள் ச்சே.../


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

Offline Global Angel

Re: பாவிகளே!
« Reply #1 on: February 23, 2012, 02:39:06 AM »
எத்தனையோ அநாதை இலங்கள் இருக்கும் போது.. ஏன் இப்படி ... மனம் நோகின்றது .....
                    

Offline Yousuf

Re: பாவிகளே!
« Reply #2 on: February 23, 2012, 04:41:27 PM »
மனம் நோந்த காரணத்தால் தான் சகோதரி மலிக்கா இந்த கவிதையை எழுதினார்கள்!

நன்றி ஏஞ்செல்!