செங்கோல் ஆட்சி
என்பது பழமை
நாற்காலி ஆட்சி
என்பது புதுமை
அன்று ஆட்சி செய்தவன்
மக்கள் மனம் வென்றான்
கொடைகள் கொடுத்து
இன்று
மக்களின் பணம் கொள்ளை
அந்நிய செலாவணியை
அடைந்திட
நாட்டை கூறு போடும்
ஆட்சியாளன் இன்று
வாய்மையே வெல்லும்
எனும் வாசகம் கூட
வாய்ப்பு இழந்து போனது
அவை நமது சட்டத்தின்
ஓட்டைகளில் நழுவி
சாக்கடை ஆனது
திண்ணைக்கு ஒரு கட்சி
ஜாதிக்கு ஒரு தலைவன்
யார்தான்
மக்களின் தலைவன்
பணமும் பேராசை குணமும்
இனமும் அடுக்கு மாளிகையும்
இன்றைய தலைவனின் தகுதி
காமராஜர் காந்தியடிகள்
மறுமுறை தோன்றினால்
நீங்கள் வாழும் நாட்டில்
நாங்களும் வாழ்வதா என
மக்களை பார்த்து
மனமுடைந்து மீண்டும்
மரணம் கொள்வர்
எட்டுத்திக்கும் மிகைஅறிவும்
கொண்ட நாம்
ஏன் நாம் நாமாக இருப்பதில்லை
நமக்காக தானே
ஆட்சி தலைமைகள்
அவர்கள் தகுதிபெற
நாம் ஏன் கைக்கூலி
பெற வேண்டும்
நமக்கு நன்மை செய்திட
நல்லாட்சி மலர்ந்திட
ஜாதியும் வீதியும் பார்த்து
தண்ட சுவடுகளுக்கு
சரித்திரம் எழுதுகிறோம்
மாற்றுவோம் மாறுவோம்
ஒன்றுபடு இந்தியனே
நம் தேசத்தின்
நலன் காத்திட