Author Topic: தாய்!  (Read 555 times)

Offline ChuMMa

தாய்!
« on: June 10, 2017, 07:14:05 PM »

உன்னை போல் பட்டாம்பூச்சியாய்
பறந்தவள் தான் நானும்

கல்லூரி முடிந்ததும் கல்யாணம்,
பறந்தவள் சிறை பிடிக்க பட்டேன்

கல்யாணம் முடிந்து ஓரிரு ஆண்டுகள்
கடந்தும் வயிற்றில் நீ வராததால்
வந்தவர்கள் வாயில் நான் அவல்
ஆனேன் ...

எத்தனை பேச்சுகள் அவதூறுகள்
நான் அறியா வார்த்தைகள்
அறிந்து கொண்டேன் அருவருப்பு கொண்டேன்

யார் குற்றம் ?
அறியவில்லை எனில்
அது பெண் குற்றம் என கொள்ளும் இச்சமூகம்

மருத்துவ வளரச்சியில் என்
வயிற்றில் நீ வளர்ந்தாய்

கடவுள் வரமென ஊர் சொல்லியது
கடவுளே வரமாக வந்ததாக நான் எண்ணினேன்

நீ பிறக்கும் முன் கருவில் நீ இருக்க
உறக்கம் தொலைத்தேன்

பெண்ணாக நீ பிறந்ததால் உறவை
தொலைத்தேன்

கள்ளிபாலா இல்லை தாய்பாலா என
உறவு கேட்டது ..

கடவுளை இழக்க மனமில்லை
உறவை இழக்க துணிந்தேன்

உன்னை வளர்த்த இந்த இருபது
வருடம் தூக்கம் பல தொலைத்தேன்
ஆனாலும் அவையாவும் ரசித்தேன்
சகித்தேன்

இன்று இருபது நொடியில் பூத்த
காதலுக்காக  என்னை மறக்க
நீ துணிந்தாய்

யார் குற்றம் இது ? இன்றும் தெரியவில்லை
உன்னை எதிர்க்க திராணியில்லை

இன்றும்
கடவுளை இழக்க மனமில்லை
உயிரை  இழக்க துணிந்தேன்


அடுத்த பிறவியிலும் பெண்ணாகவே
பிறப்பேன் உன்னை சுமந்த சுகம்
மீண்டும் பெற ...


« Last Edit: June 13, 2017, 05:25:10 PM by ChuMMa »
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ???
« Reply #1 on: June 11, 2017, 01:41:52 PM »
''இன்று இருபது நொடியில் பூத்த
காதலுக்காக  என்னை மறக்க
நீ துணிந்தாய்''

இதுவே மனித குணம் ...
புதிய உறவு கிடைத்ததும்
சுமந்தவள் பாரமாகிப் போனாள்


''இன்றும்
கடவுளை இழக்க மனமில்லை
உயிரை  இழக்க துணிந்தேன் ''

 உயிரைக் கொடுத்து சுமந்தவள் ...
இன்று உயிர்  உயிரைத் துறக்க துணிந்தாள்...
தடுக்க நாதியில்லை...


''அடுத்த பிறவியிலும் பெண்ணாகவே
பிறப்பேன் உன்னை சுமந்த சுகம்
மீண்டும் பெற ...''

அன்னை அவர் வலியைப்
போக்கிட மருந்துமில்லை ...
அவரின் அன்பிற்கும் தியாகத்திற்கும்
ஈடுயிணையில்லை ..


அருமையான கவிதை
சும்மா அண்ணா ...
ஆழமான வரிகள் ...

காதல் தவறல்ல ....
புதிதாய் மலர்ந்த காதலுக்காக
20 வருடம் பெற்று வளர்த்து
பிள்ளைகளே உலகமென
இருக்கும் பெற்றோர்களின்
காதலை மறப்பது ...அவமதிப்பது
தவறு !!!

நம்மை நேசிக்கும்
இரு உயிரை நேசிப்போம் ...
பிறகு,
நமக்கான ஓர் உயிரை
நேசிப்போம் ...

வாழ்த்துக்கள் அண்ணா ...
தொடரட்டும் பயணம் ...
நன்றி ..!!!




Offline ChuMMa

Re: ???
« Reply #2 on: June 12, 2017, 11:23:50 AM »
ரித்திகா சகோ

என் கவிதையினும் வரிகள்
அதிகம் கொண்ட உங்கள் கருத்துக்கள்
அழகாக புரிந்துகொண்டுயிருக்கிறீர்கள்

"20 வருடம் பெற்று வளர்த்து
பிள்ளைகளே உலகமென
இருக்கும் பெற்றோர்களின்
காதலை மறப்பது ...அவமதிப்பது
தவறு !!!

நம்மை நேசிக்கும்
இரு உயிரை நேசிப்போம் ...
பிறகு,
நமக்கான ஓர் உயிரை
நேசிப்போம் ...

அழகான சரியான உபதேசம்

நன்றிகள் பல
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SunRisE

Re: ???
« Reply #3 on: June 13, 2017, 08:26:39 AM »
Chumma nanbare,

Alama karuthinai azhagana varigalil kuthamaikku vazhthukkal
ithupondru matrumiru kavithaikku kathirukkiren nanbane