Author Topic: அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும்  (Read 444 times)

Offline AYaNa

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!  :'(

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா :-[ .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!  :(

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!  :-[

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெற்று
குற்றம் உன்மேல் எனும்
சுத்தமானவளே
--உனக்கு கோபிக்க தெரியாதா அம்மா .!  :-\

காற்றுப்பட்டு நான் வீழ்ந்தாலும்
கண்பட்டு வீழ்ந்தேன் என்று
ஊருக்கே திட்டிவிட்டு
கண் திருஷ்டி கழிப்பவளே
-- உனக்கு கண்ணானேனா நான் அம்மா .!  :-[

தோளுக்கு மேல் வளர்ந்த பின்பும்
தலை துடைத்து
எண்ணெய் தேய்க்க
--இன்னும் சலிக்கவில்லையா அம்மா .! :(

விக்கினாலும் தும்மினாலும்
நினைப்பது என் பிள்ளை என்று
நெகிழ்கின்றாயே அம்மா  :)

நினைத்துக்கொள்கின்றேன்

இன்னுமோர் பிறப்பில் உனக்கு நான்
அன்னையாக ...!! :)                                                                                    படித்ததில் நெகிழ்ந்தது     :'( :'( :'(                     
« Last Edit: June 08, 2017, 01:44:14 PM by AYaNa »

Offline SunRisE

Ammavin nesam vaarthagaigal illa vaanavil.
Antha ammavukke thayaga vendum
Endra varam kittinaal
Athuve thaaimaikku kidaitha parish
Arumai vazhthukkal Ayana machi.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’