Author Topic: ~ சமச்சீர் டயட் - பெண் உடல் மேம்படட்டும்! ~  (Read 2073 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சிவப்பரிசி பாயசம்



தேவையானவை:

சிவப்பரிசி - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் - 1 கப், நாட்டுச் சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை:

சிவப்பரிசியை வெறும் வாணலியில் மிதமான தீயில் வாசம் வரும் வரை வறுக்கவும். ஆறியதும், மிக்ஸியில் ரவை போல உடைக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரியைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சிவப்பரிசி ரவையைச் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். நன்றாக வெந்ததும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கிளறி, அடுப்பை அணைக்கவும். வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

பலன்கள்:

கொழுப்பைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, பித்தப்பைக் கற்கள், ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சோயா உருண்டை மசாலா



தேவையானவை:

சோயா உருண்டைகள் - 1 கப், பெரிய வெங்காயம் - 1, இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், தக்காளி - 1, சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். சூடு ஆறியதும் நீரை வடிகட்டிக் கையால் பிழிந்து, மீண்டும் நீர் ஊற்றிப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். பிறகு, தேவையான அளவில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி சோம்பு, பட்டைத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி, நறுக்கிய சோயா உருண்டைகள் போட்டுக் கிளறவும். மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும். தண்ணீர் வற்றியதும், நன்றாகக் கிளறி இறக்கவும்.

பலன்கள்:

உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. செரிமான சக்தியை அதிகரிக்கும். உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும். பட்டை, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தினை கேசரி



தேவையானவை:

 தினை - அரை கப், நாட்டுச் சர்க்கரை - அரை கப், தண்ணீர் - 2 கப், நெய் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உலர் திராட்சை, முந்திரி தலா - 10, கேசரி கலர் - 1 சிட்டிகை

செய்முறை:

 வாணலியில் நெய் விட்டுச் சூடாக்கி, உலர் திராட்சை, முந்திரியை வறுத்துத் தனியாக வைக்கவும். அதே நெய்யில் தினையை வறுக்கவும். பிறகு ஆறவிட்டு, மிக்ஸியில் ரவை போல் அரைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி, தினை ரவையைச் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் நாட்டுச் சர்க்கரை, கேசரி கலர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறவும் (இடையிடையே நெய் சேர்த்துக் கிளறவும்). இறுகியதும், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். 

பலன்கள்:

தினை கொழுப்பைக் குறைத்து, உடல் எடை குறைக்க உதவுகிறது. தினையில் நிறைந்துள்ள புரதச்சத்து உடலை வலுவாக்கும். வாயுக் கோளாறைப் போக்கும். பசியை உண்டாக்கும். மற்ற தானியங்களைவிட தினையில் இரும்புச்சத்து அதிகம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
நெல்லிக்காய் சாதம்



தேவையானவை:

 பெரிய நெல்லிக்காய் - 2, வேகவைத்த சாதம் - 1 கப், பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

 நெல்லிக்காயைத் துருவிக்கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். பொன்னிறமானதும் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், துருவிய நெல்லிக்காய் சேர்த்துக் கிளறவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மேலும் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும். இந்தக் கலவையைச் சாதத்தில் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

பலன்கள்:

இதய நோய், மஞ்சள்காமாலை வராமல் தடுக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் குறைக்கும். பார்வைத்திறன் மேம்படும். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். ரத்த உற்பத்திக்கு உதவும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
முளைகட்டிய பயறு சாலட்



தேவையானவை:

 முளைகட்டிய பச்சைப் பயறு - 1 கப், நறுக்கிய குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன், கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1 (நறுக்கவும்), மாங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கறுப்பு உப்பு - 2 சிட்டிகை, ஆலிவ் ஆயில் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

நறுக்கிய பச்சை மிளகாய், குடமிளகாய், முளைகட்டிய பச்சைப் பயறு, கேரட் துருவல், மாங்காய்த் துருவல், கறுப்பு உப்பு, ஆலிவ் ஆயில் ஆகியவற்றை பாத்திரத்தில் சேர்த்துக் கிளறவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். 

பலன்கள்:

முளைகட்டிய பயறில் அதிக அளவு புரதம், வைட்டமின்கள் மற்றும் மாவுச்சத்து நிறைந்துள்ளன. இந்த சாலட் உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது. கேரட், ரத்த உற்பத்திக்கும் சருமப் பராமரிப்புக்கும் உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த குடமிளகாய், உடல் புத்துணர்வு பெற உதவுகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மாதுளை லஸ்ஸி



தேவையானவை:

 கெட்டித் தயிர் - 1 கப், மாதுளை முத்துகள் - 1 கப், நாட்டுச் சர்க்கரை - 2 டீஸ்பூன், ரோஸ் எசென்ஸ் - கால் டீஸ்பூன் (விருப்பப்பட்டால்), புதினா இலை - சிறிதளவு

செய்முறை:

மிக்ஸியில் கெட்டித் தயிர், மாதுளை முத்துகள், நாட்டுச் சர்க்கரை, ரோஸ் எசென்ஸ் சேர்த்து அரைக்கவும். அரைத்த கலவையை டம்ளரில் ஊற்றி, மாதுளை முத்துகள், புதினா இலை தூவிப் பரிமாறவும்.

பலன்கள்:

மாதுளை, முடி உதிர்வதைத் தடுக்கும். சருமச் சுருக்கங்களைச் சரிசெய்யும். நினைவாற்றலை மேம்படுத்தும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். ரத்தவிருத்திக்கு உதவும். புதினா, புத்துணர்வு பெற உதவும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
புதினா ஜூஸ்



தேவையானவை:

 புதினா இலை - 30, வறுத்த சீரகத்தூள் - 2 சிட்டிகை, மிளகுத்தூள் - 1 சிட்டிகை, தண்ணீர் - 2 கப், தேன் - 3 டீஸ்பூன், கறுப்பு உப்பு - 1 சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

புதினா, தேன், சீரகத்தூள், மிளகுத்தூள், கறுப்பு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையில் மீதமுள்ள தண்ணீர் சேர்த்து, ஐஸ்கட்டிகள் போட்டுப் பருகவும்.

பலன்கள்:

 ரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. மேலும், ரத்த உற்பத்திக்கு உதவுகிறது. வயிற்றுப்போக்கை சரிசெய்யும். வயிற்றைச் சுத்தம் செய்யும். செரிமான சக்தியை அதிகரிக்கும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226323
  • Total likes: 28793
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
செம்பருத்திப்பூ ஜூஸ்



தேவையானவை:

 செம்பருத்திப்பூ - 4, தண்ணீர் - 1 கப், நாட்டுச் சர்க்கரை - 3 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், ஐஸ்கட்டிகள் - 4.

செய்முறை:

செம்பருத்தி இதழ்களை மட்டும் தனியாக ஆய்ந்து வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து இறக்கவும். கொதித்தத் தண்ணீரில் செம்பருத்தி இதழ்களைப் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை 10 நிமிடம் மூடிவைக்கவும். பிறகு திறந்து பார்த்தால், எசென்ஸ் கலந்து நீர் சிவப்பாக இருக்கும். இந்த நீரை வடிகட்டி, இதனுடன் நாட்டுச் சர்க்கரை, எலுமிச்சைச் சாறு, ஐஸ்கட்டிகள் போட்டுப் பரிமாறவும்.

பலன்கள்:

இதயநோய்கள் வராமல் தடுக்கும். ரத்தக்குழாய் அடைப்பு, வலிப்பு மற்றும் படபடப்பை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். மாதவிடாய்க் கோளாறைச் சரி செய்யும்.