தொல்லைகள் பல
வரும் நண்பனே
துயரம் கொள்ளாதே!
தொடர்ந்து முன்னேறு
இல்லை என்றால்
தோழ்வி எனும்
தொடர்கதை மிஞ்சும்
ஆலம் விழுதுக்கு
சுவர் எடுத்து
தடுக்க முடியாது
நண்பனே!
உனது எண்ணங்கள்
ஆலம் விழுது ஆகட்டும்
அடைப்படும்
கேளிக்கை
பொருளாக வேண்டாம்
அளவில்லா அன்பும்
பற்றில்லா பாசமும்
பசியற்றவனுக்கு
பஞ்சாமிர்தம்
ஆகிவிடும்
பற்றுகொள் பகுத்தறிந்து
உன் மனத்தில் என்றும்
பாசம் வை
பிறர் உன்னை
நேசிக்கும் படி
கற்பை பேணும்
பெண் கண்மணிகள் போல்
நீ பிறந்த நாட்டை
பேண வேண்டும்
அது உன் வீட்டையும்
உனது இலட்சியங்களை
எல்லையின்றி
பாதுகாக்கும்
போட்டி என்றால் அங்கே
நேர்த்தியான வாழ்வை நினை
பகுத்தாயும் கல்வி
பலன் தரும்
என்றும் உனக்கு
தொகுத்து ஆராயும்
பண்பினை தொடர
தாயிடம் பயின்ற
கல்வி மறக்காதே
அதுவே
உன் வாழ்க்கையின்
முதல் ஆயுதம்
இருள் கொண்ட
சினம் தவிர்
அது இல்லாத
பண்பறிவு கொள்
இயற்கை உணர்வால்
இறைவன் தந்த
இயற்கை அறிவு
என்றும் இயம்பு
ஆறறிவு கிட்டிய நீ
ஐந்தறிவு கொண்ட
விலங்குகளையும் பேணு
பல் வித ஆற்றல்
நீ படிக்கும்
நற் புத்தகங்கள்
நண்பனாக்கி கொள்
எழுதல் படித்தல்
உன்னிடம் இருப்பின்
பழுதில் அறிவுப் பயன்
படைத்தவனை மறக்காதே
பகுத்தறிவு கொண்டாலும்
வாழ்வின் வழி காட்டும்
நெறி கற்கும்
எல்லா வேதமும்
கற்றுக்கொள்
ஏற்றம் காண்பாய்
உன் வாழ்விலே
என் உயிர் நண்பனே!
💐என் எப் டி சி நண்பர்களுக்கு சமர்ப்பணம்💐
உங்கள் நண்பன். சன் ரைஸ்