நான் விரும்புவது உன் கவிதைகளைத்தான்
அது சரி, அதிசயம் ஒன்றும் இல்லை .
என்னை விரும்புவது கவிதையோ,நீயோ
இரண்டில் எதுவாயினும் அதிசயம் தான்
ஒன்றல்ல ஓராயிரம் கடிதம் வரையலாம்
நிபந்தனையை கொஞ்சம் தளர்திகொண்டால்
என்ன செய்து தொலைப்பது நான் ,
இயல்பிலேயே நேசிக்க பிறந்தவனோ என்னவோ
இப்பொழுதும் நேசிக்கின்றேன்
தமிழை,
கவிதையை ,
இனிமையை ....