உன் வாழ்க்கை நீ வாழத்தான்
வாழ்ந்து தான் பார்
ஏளனம் இகழ்ச்சி
இன்பம் துன்பம்
இவையாவும்
பல நேரங்களில்
வெவ்வேறு பரிமாணங்களில்
இவை அனைத்தும்
உன் விதி என்கிறது
படைத்தவனின் பதிவுகள்
கனவாகி போனது
என் வாழ்வு என நான்
கலங்கி நின்ற
நேரங்களில்
சுமைகள் சுகமானது
எமது தோள்களில்
இறக்கி வை
நங்கள் இருக்கிறோம்
என்கிறது தோழமை
உனக்கென்ன
வாழ்க்கை தந்தேன்
என் உதிரம் குடுத்து
உயிர் தந்தேன்
என் கடமை செய்தேன்
நீ துக்கம் கொள்ள
இல்லை என் மகனே
என்கிறது தாய்மை
பணம் தந்தேன்
வழக்கை பற்று தந்தேன்
நல் கல்வி தந்தேன்
உனக்கு என்
முகவரி தந்தேன்
என் மகனே
என்கிறது தகப்பன்
நீ வேண்டும்
உன் நிழல் வேண்டும்
என் வாழ் நாள் முழுதும்
நித்தம் நித்தம்
அன்புடன் ஆசையுடன்
நீ என்னை ஆளவேண்டும்
என்கிறது காதல்
அத்தனை வார்த்தைகளும்
பல நேரங்களில்
நிறம் குணம்
மாறிப் போவது ஏன்?
சூழல்கள் சூழ்ச்சிகள்
நிறைந்த உலகத்தில்
மனிதனின் நிறம்
மாறுவது
இயற்கையா அல்லது
அதுவும் விதியா?
சில நேரங்களில்
சில மனிதர்கள்