Author Topic: விவசாயின் ஒரு குட்டி கவிதை...  (Read 5790 times)

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் ,
மறுக்க முடியாது ,
இதை மறந்துபோனதுதான் வேதனை !

பெருகிப்போகும் மக்கள் தொகை ,
சுருங்கிப்போன விவசாயம் ,

நாகரீக வாழ்க்கையில்
சேற்று வாசனையும் நாற்று வாசனையும்
மக்களுக்கு நாற்றமாய் தெரிய ,
பட்டணம்தேடி பறக்கிறார்கள் ,
கிராமத்தை வெறுக்கிறார்கள் ,
காசு கொடுத்து வாங்காத இயற்கை காற்றை மறந்து ,
காசு கொடுத்து வாங்கும் ஏசி காற்றில் மயக்கம் !

வலுவிழந்த விவசாய முதுகெலும்பு ,
ரத்த ஓட்டத்தில் ஆங்காங்கே தடைகள் ,
துண்டுகளாகிப்போன ஆறுகள் , நதிகள் ,
என்று சேரப்போகிறது ஒன்றாய் ,
வலுவிழந்த முதுகெலும்பிற்கு
வலுச் சேர்க்கும் வழி நதிகளை
தேசியமயமாக்கலும் இணைத்தலுமே !

பொன்னை விளைவிக்கும்
பூமித்தாயின் வயிற்றில் ,
கட்டிட புற்றுநோய் அல்லவோ தொற்றிக்கிடக்கு !
உணவு பொருட்கள் விளைந்து செழித்த இடத்தில்
கழிவு குப்பைகளை கொட்டி
பூமியின் புனிதத்தை கெடுக்கிறோம் !

மும்மாரி பொழிந்த மழை ,
முப்போகம் விளைந்த நெல் ,
பசுமையால் செழித்த பூமி ,
பசியாறிய உலகம் ,
மருந்துகள் இல்லாத அந்த காலத்தில் ,
இயற்கையாய் விளைச்சல்,
ஆறுமாத பயிரால்
ஆயிசு நூறு ,
மூன்று மாத பயிரால்
ஆயிசு பாதி ,
இயற்கையை உண்டவன் இயற்கையாய் மடிந்தான் ,
மருந்தால் விளைந்ததை சாப்பிட்டவன்
மருந்தாலே மடிகிறான் !

ஆயிரம் தொழில்களில் ஆர்வம் கொண்டோம் ,
சோறுபோடும் தொழிலை மறந்துபோனோம் ,
சேற்றில் கால்வைக்காவிட்டால் ,
சோற்றுக்கு வழியேது
கணிப்பொறிகள் வந்ததும்
கழனிகளை மறந்துவிட்டோம் ,
எப்படி ஏறி எங்கு சென்றாலும் ,
அடிப்படை என்பது விவசாயம்தானே !

வரப்புகளை வெறுத்தோம் ,
இயற்கையின் வெறுப்புகளை சம்பாதிக்கிறோம் ,
பணமென்பதையே கொள்கையாய் கொண்டுவிட்டோம் ,
விவசாயத்தை விட்டுவிட்டால் ,
நாளை பணத்தையா தின்ன முடியும் !

விளையாட்டு சாதனைக்கு
கோடிக்கணக்கில் பரிசு ,
விவசாய சாதனைக்கு என்னையா இருக்கு ,
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை !

இந்தியாவின் முதுகெலும்பு
கூன் விழுந்து போய்விட்டது ,
ஆமாம்,விவசாய நிலங்களில்
இன்று கட்டிடங்கள் அல்லவே
விளைந்து கிடக்கு !

எருவும் , நீரும் , சேறும் , விதையும்
கலந்த இடத்தில் ,
இன்று கம்பியும் , கலவையும் , கான்கிரிட்டும்
அல்லவா கலந்து கிடக்கு !

நாற்று வாசனை வந்த இடத்தில் ,
தார் வாசனை ,
வரப்புகளை அபகரித்த
தேசிய நெடுஞ்சாலைகள் ,
சோறுக்கு வழிதேடாத அரசு ,
பீருக்கு வழிதேடுது ,
களையிழந்த விவசாய ஒழுங்குமுறை
விற்பனைக்கூடம் ,
களைகட்டும் அரசு மற்றும் தனியார் மதுக்கடைகள்!
முட்டாள் சட்டங்களால் ,
முடங்கிப்போன விவசாயம் ,
விளைவித்த நிலங்கள்
இன்று விலைநிலமாய்,
பாரத தாயின் உடலை
பங்கு போட்டுக்கொள்ளும் ரியல் எஸ்டேட் !

வருடா வருடம் வரும் பட்ஜெட் ,
வாழவைக்கும் விவசாயத்தை மறந்துவிட்டு ,
சாகடிக்கும் ராணுவ தளபாடங்கள் வாங்க முதலிடம்!
ரத்தத்தை வியர்வையாக்கி ,
உழைத்து சோர்ந்தவனுக்கு
ஓய்வெடுக்க வீடில்லை ,
A / C அறையில் ஓசியில் தூங்கும் அதிகாரிகளுக்கு
ஐந்தாவது , ஆறாவது ஊதிய கமிஷனில்
சம்பள ஏற்றம் ,வீடு , ஊர் சுற்ற கார் !

படைத்தவன் கடவுளென்றால்
பயிர்விப்பவர்களும் கடவுளே ,
விவசாயிகளை போற்றுவோம் ,
விவசாயத்தை போற்றுவோம் !

மருந்துகளை மறப்போம் ,
இயற்கையை மதிப்போம் ,
செயற்கை வழியை மறந்துவிட்டு ,
இயற்கை வழி பயிர் செய்வோம்
வளைந்து போன இந்தியாவின்
முதுகெலும்பிற்கு தெம்பு சேர்ப்போம் !

நதிகளை இணைப்போம் ,
நம்பிக்கையோடு உழைப்போம் ,
விவசாய தொழிலை
விஞ்ஞானத்தோடு சேர்ப்போம் ,
விஞ்ஞானத்தை விவசாயத்திலும்
புகுத்துவோம் ,
நோய்களை கொல்லுவோம்,
துவண்ட விவசாயத்திற்கு தோள்கொடுப்போம்
மற்றுமொருமுறை புரட்சி செய்வோம் ,
விவசாய புரட்சி !
« Last Edit: May 22, 2017, 05:30:51 PM by JeSiNa »

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
Hi Jesina,

ஆணை கட்டி போரடித்து
மாடு வண்டிகள்
புடைசூழ
மணிகதிர் கொண்டு
செல்லும் அழகை
கவி பாடினான்
அன்றைய கவி

இன்று
விவசாயம்
என்னவென்று
விளக்கம் கூற
கவி கவிதை படுகிறான்

உங்களது கவிதை அருமை
வாழ்த்துக்கள்

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Thnx :) Sun

Offline ChuMMa

ஜெசி மா

என் ஜெசிமா வின் மனதில் ஒரு சூறாவளி காண்கிறேன்

"மும்மாரி பொழிந்த மழை ,
முப்போகம் விளைந்த நெல் ,
பசுமையால் செழித்த பூமி ,
பசியாறிய உலகம் ,"

படிக்கையில் மனது நிறைகிறது ...

கூன் விழுந்த விவசாயம் அதற்கு கூன் போடும்
அரசியலும் அதிகரிகளுமே காரணம்

"நதிகளை இணைப்போம் ,
நம்பிக்கையோடு உழைப்போம்"

வாழ்த்துக்கள் சகோ




En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Thnx chumma na :)

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
jesi chllm :-* nee kutti kavithai nu sollum bothe ennamo irukunu nenachen ;D unakulla irukira thiramaigala eppavum vituratha :D rmba azhagan kavithai :D vethanaigalai unarthum kavithai :( thodarnthu eluthu chllm :-*

Offline DeepaLi

Hi jesi machi... varigal migavum vethanai padum padi eludhi iruka.. varigala padikumbodhey adhoda kastam theridu apo adha anubavikravangalku evlo kastam irkum nu nenachi patha rombave kastama  iruku... unmaiyana varigal.. idhai mattrum ulagam kandipa amaium.. valthukal...:)

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Thnx Vipu Chlm :-* And Deepz Machi :-*

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் தங்கச்சி

கவிதை முன்னேற்றம்
கவிதையின் கருப்பொருள் புரட்சி
உனது முயற்சியும் கவிதை சொல்
உண்மையும் காலத்தின் தேவை


வளரும் தமிழச்சி உணர்வுகளை
வளரும் யுவதியின் மனித நேயத்தை
தமிழனாக மனிதனாக கண்டு
மகிழ்கின்றேன் வாழ்த்துகின்றேன்


உணர்வுகள் வளர்க
உன் வாழ்க்கை உயர்க
வாழ்க பல்லாண்டு


நன்றி யெசிமா
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Thnx sari na :)

Offline AYaNa

 :)realy superb sis alazhana unmaiyana elutukal  :)

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Thnx ayana

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4585
  • Total likes: 5312
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Thnx rithi ma :)