எங்கோ ஒரு மூலையில் நானும்
எங்கோ ஒரு மூலையில் நீயும்
பார்க்காமல் பழகினோம்
பார்த்து மகிழ்ந்தோம்
நாள் முழுதும் பேசி சிரித்து
நாள் முடிவில்
பிரியும் தருணத்தை கூட
பிரிய மனம் இல்லாமல்
பிரிவேன்...
தாயின் பாசத்தை உணர்ந்தேன்
உன் பாசத்தில்...
தந்தையின் கண்டிப்பை உணர்ந்தேன்
உன் நேசத்தில்
உன்னால் மட்டும் ஏன்
என்னை உணரமுடியவில்லை
என் பாசத்தில் வேஷத்தை கண்டாயோ??
ராசி இல்லாதவள் நான்
பல உறவை இழந்து
தவித்த போது ஆறுதல் தந்தாய்
உன்னை இழந்து தவிப்பேன்
என்று கனவிலும் கருதவில்லை
ஆறுதல் தேடும் மனது
போகும் இடம்
எல்லாம் உன் நினைவு
விரைவில்
எல்லாவற்றையும் விட்டு
செல்ல நினைக்கிறன்
என் நினைவுகள் மட்டும்
உன்னை தொடும் என்ற நம்பிக்கையில்...