வேடிக்கை நிறைந்தது நம் வாழ்க்கை
தோழா ,
இரவை பகலாக்க நினைத்து உழைத்து
பகலை இரவாக்கி உறங்கினான்
முகபுத்தகத்தில் ஆயிரம் நண்பர்களாம்
பக்கத்துக்கு வீட்டில் குடியிருப்பவரின்
முகமறியாதவன்
பெண்ணை தாழ்வாக பேசியவர் கூட
இன்று பெண்ணின் முகமூடியுடன் அலைகிறான்
இணையத்தில்
பத்தினியின் பெயர் சொல் என்றேன்
சிறிது யோசித்து சொன்னான் கண்ணகி என்று
அவன் வீட்டு பத்தினியின் பெயர் தெரியவில்லை போலும்
பெண் நாணத்தால் தலை நிமிராமல் நடந்த காலம் போய்
இன்று ஆணும் தலை நிமிராமல் நடக்கிறான் உடன் -தன்
தொலைபேசியை தடவி கொண்டு
ஆடை கிழிந்து ஒருவன் நடந்து வந்தால் அவனை
அருவருப்பாய் பார்க்கிறான் -அவனே
உயர் ரக வாகனத்தில் வந்து இறங்கினால்
அதிசயமாய் பார்க்கிறான்
ஊர் உறவை மறந்து , புது உறவை வளர்த்து
பெற்றோரின் மனம் குளிர ஓரிரு வார்த்தைகள்
பேசாமல் -முகமறியா உறவோடு பல மணி நேரம்
தூங்காமல் விழித்திருந்து பேசும் உன் வாழ்க்கை
வேடிக்கை நிறைந்தது தான் தோழா ...
நன்றி
சும்மா