யாரும் என்னோடு இல்லாத வேளையில்
என்னை அன்போடு அரவணைக்கும் இனிமை
அன்பர்கள் நண்பர்கள் உதறிவிடும் தருணம்
தாவி அரவணைக்கும் உருவமில்லா நட்பு
துயில்கொள்ளும் தருணத்தில் என்னவள் ஏக்கத்தை என்னுள் எழுப்பி
கண்ணீர் முத்துக்களை மாலையென மாற்றி
(அவள்) சிதைத்த என் இதயத்தை வருடிவிடும் அன்பு
கயவர் கூட்டம் அருகில் கடிய
பகைவர் கடினம் கண்ணை இறுக்க
ஆசை ஒளிரும் தோழியின் நளினம்
மயக்க மனதை வருடும் பயணம்
தாயின் கருவில் இறையவன் அருளில்
என்னுடன் உறங்கி கிடந்த நல்வாய்ப்பு
நீ இல்லை என்றால் மண்ணே நிம்மதி
என் ஊன்றுகோல் !
என் தனிமை !