ஏன் ?
ஆர்ப்பரிக்கும் அலைகடல்தான் ஓய்ந்திருக்க
தனித்திருக்கும் அகக்கடல்தான் பொங்கியதும் ஏன்?
அலைமகள்தான் அசையாதிருக்க,
நிலமகளும் துயின்றிட,
பெண்மனம்தான் துடிப்பதும் ஏன்?
கானகத்தின் காரிருளில்
அடைந்திட்ட புல்லினங்களும்,
தொடுவானில் எட்டிப்பார்க்கும் நிலவும்,
நானில உயிரினங்களும் நித்திரையில் ஆழ்ந்திருக்க
வானகமும்,வையகமும் மோனத்திலே வீற்றிருக்க
கன்னியிவள் மனதும் தவிப்பதேன்?
காற்றில் மிதந்து வரும் மலர்களின் மணமும்
காரிகையிவள் மனதில் வெம்மை தோய்த்திட
மங்கைக்கு கையறு நிலையும்
ஏன்?