Author Topic: இறந்தும் என்னுள் நீ வாழ!  (Read 625 times)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
இறந்தும் என்னுள் நீ வாழ!
உயிருடன் நான் ஓர் பிணமாய்.....!



சுகத்தை கேட்கயில்
வலித்தாலும் ஒருபோதும்
மறுத்ததில்லை! நீ எனக்கு.

எனக்கு வலிக்கையில் கூட
உணர்ந்ததில்லை நான் உன் வலி!


முரண்களிலும் முரண்டதில்லை
என்னோடு நீ.....
மௌனத்தால் வெற்றிகொள்வாய் 
என் நீதியற்ற கோவமதை.....

உணர நான் முயன்றதே இல்லை
இல்வாழ்வை..... 
உணர்த்தினாய் மரணமெனும்
மௌனத்தால்!


தொடருமென சிந்தை கொண்டேன்
முதுமைவரை
இளமையிலே முதுமை கண்டேன்
வலிகளிலே.....!


தொடர்ந்தாலும் உனை உணரா யடம் நான்.

இறந்து என்னுள் நீ வாழ!
உயிருடன் நான் ஓர் பிணமாய்.....!


தவிக்க விட்டு போனாயே.....
தனியே உன் குழந்தையுடன் நான்வாட.....


நீ உன் மரணம் கொண்டு தந்தது
சரியான தண்டணைதான் எனக்கு.....


சிறுகச் சிறுக நான் செய்கொடுமையில்
உன் மேனி நொந்து... மனதும் வெந்து.....
அற்பமான ஆயுள் என்று சென்றுவிட்டாய்.....


உன் ஆயுளை அற்பமாக்கிய பாவி
நான்செய் பாவத்துக்கு பலன்பெறும்
காலம் இது வாடுகின்றேன்.....


இறந்தும் என்னுள் நீ வாழ!
உயிருடன் நான் ஓர் பிணமாய்.....!



குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ChuMMa

Re: இறந்தும் என்னுள் நீ வாழ!
« Reply #1 on: April 17, 2017, 09:24:35 PM »
வலிகள் தாக்கின

இறந்தும் என்னுள் நீ வாழ!
உயிருடன் நான் ஓர் பிணமாய்.....!

இருக்கையில் தெரிவதில்லை
இறக்கையில் தெளியவும் இல்லை !

மனதில் வலிகளுடன்
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: இறந்தும் என்னுள் நீ வாழ!
« Reply #2 on: April 18, 2017, 01:02:01 AM »
வாழும் நாட்களில் கொள்ளும்
அன்பு
ஆயுளை நெடுப்பிக்கும்
வாழ்வும் இன்பமாகும்
இல்லறம் புனிதமாகும்

நன்றி சகோ.
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline Maran

Re: இறந்தும் என்னுள் நீ வாழ!
« Reply #3 on: April 18, 2017, 03:08:16 AM »




அருமையான கவிதை! மிக அழகாய் வரிகளை தேர்ந்தெடுத்து தவிக்கும் மனதை கவிதையாக்கியுள்ளீர்கள், ஒருவரின் இழப்பினால் வரும் இழப்பீடுகளை கருத்தில் கொள்ளாமலே விழுங்கி விட்டு போய்விடுகிறது மரணமெனும் அரவம். வரிகளில் வலிகள் தெரிகிறது. வாழ்த்துக்கள்.





Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: இறந்தும் என்னுள் நீ வாழ!
« Reply #4 on: April 19, 2017, 09:25:46 PM »
வணக்கம் தோழா
 
ஏதோ ஒரு கனமான இரவில் பிறந்த குழந்தை
பிரசவித்து முடிக்கையில் தான் மனதின் நிறை
குறைந்தது 


வலிகாணாது பெற்றால்
பிள்ளைகூட பெருமை அற்றதுதானே


சிலரை ஆகிலும் வலிசுமத்தே ஈன்றேன்
அவற்றில் இவளும் ஒருத்தி
எனவே தான் கனத்தாள் போலும்


கருத்துரைக்கு மகிழ்ச்சி நிறைந்த நன்றிகள் தோழா
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline MyNa

Re: இறந்தும் என்னுள் நீ வாழ!
« Reply #5 on: May 03, 2017, 10:29:34 AM »
Vanakam sarithan..
intha kavithaiyai padikirapo ipadiyum ezhutha mudiyamanu viyaka vaikithu unga varigal.. Valigal thaangi malarnthirukum kavithai.. varthaigal illai vimarsika.. ithai padika thodangiyathu muthal padithu muditha piragum manasu bhaaramave iruku.. ipadi oru kavithaiya engalodu pagirnthathuku nandri sarithan.. vazhthukal   :)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: இறந்தும் என்னுள் நீ வாழ!
« Reply #6 on: May 05, 2017, 11:13:36 AM »
வணக்கம் மைனா

மிக மிக பெரிய வார்த்தைகளில்
வாழ்த்தி இருக்கின்றீர்கள்


எனக்கு பொருந்துமா
என்ன சொல்வதென
தெரியவில்லை

 
வாழ்த்துரைக்கு தகமைபெற உழைக்கின்றேன்
கருத்துரைக்கு மிக்க நன்றி மைனா
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....