பெயர் தெரியாத என்னவனே...
நானே ஒரு பெயரை... உனக்கு அமைத்து கொண்டேன்...
உனக்கே தெரியாமல் உன்னுடன் பேசிக் கொள்கிறேன்...
என்னுடைய நினைவுகளால்...
ஆயிரம் கோடி ஆண்கள் இருப்பினும்...
என் மனம் ஏனோ உன்னை மட்டும் தேடுகிறது...
நான் உன் முதல் காதலாக இல்லாமல் இருக்கலாம்...
ஆனால் நானே உன் இறுதி காதலாக இருக்க ஆசை படுகிறேன்...
நீயே என் காதலனாக வருவாய் என்று தெரிந்து இருந்தால்...
பிறக்கும் போது கூட அழுதிருக்க மாட்டேன்...
ஒரு முறை ஆவது சொல்லி விட வேண்டும் என்று தான் நினைக்கிறன்...
சொல்லாமல் விட்ட என் காதலை.. .
உன் வருகைக்காக காத்து கொண்டு இருந்த நான்...
இன்றும் காத்து கொண்டு தான் இருக்கிறேன்...
ஒரு தலைக் காதலுடன்...
தீபாளி
கற்பனையாக மட்டும்