இவ்வுலகில் பிறந்ததும்
என் தாய் எனக்கு அறிமுகபடுத்தியதாலோ
தாய் மொழி என்றே அழைக்கிறோம் தமிழை ..
தாய்க்கு கொடுக்கும் மரியாதையை
என் தமிழுக்கும் கொடுப்போம் ..
மொழிபெயரையே தம் குழந்தைக்கு
வைக்கும் பாக்கியம் பெற்றவர் நாம்
வேறு மொழிக்கில்லையே இப்பாக்கியம் !?
தமிழன் உலகுக்கு பல கற்று தந்திருக்கிறான்
இன்றும் போராடி கொண்டிருக்கிறான் தன்
இனம் காக்க,தன் மொழி காக்க
எங்கள் தமிழ் உயர்வென்று சொல்லி
பல தலைமுறைகள் கடந்தோம்
வள்ளுவன், வாமனன் போல்
இரண்டடியில் அளந்தான்
கம்பனும்,பாரதியும் உடன் உலகை அளந்தனர்
தமிழால் வாழ்ந்தோர் பலர்
ஆனால்
தமிழால் இழந்தோர் இலர்
வலிக்கையில் அ ஆ
சிரிக்கையில் இ ஈ
காரத்தில் உ ஊ
கோவத்தில் எ ஏ
வெட்கத்தில் ஐ
ஆச்சரியத்தில் ஓ ஒ
வக்கணையில் ஔ
விக்கலில் ஃ
நம்மை அறியாமல் நம்மில்
கலந்து தினமும் வாழ்கிறது தமிழ் ,
தமிழை கற்பை போல காப்போம் நாம் வா தோழா ...