அடிபெண்ணே !
நீ என்ன விழாகால சிறப்புச்சலுகை பொருளா ?
உன் குரல் வரம் வாங்கினேன்
தனிமையின் இனிமை இலவசம்
உன் நினைவை வாங்கினேன்
கொஞ்சும் கனவுகள் இலவசம்
உன் கவின், கவிதை வாங்கினேன்
கட்டுகடங்கா கற்பனைகள் இலவசம்
என்னவிளையானாலும்
உன் இதயத்தை வாங்க தயார் ...
இலவசமாய் உன் காதல் கிடைக்குமா ?