Author Topic: ரொம்ப சூடா குடிக்கிறீங்களா?..தொண்டை புற்றுநோய் வரும்  (Read 1260 times)

Offline RemO

கொதிக்க கொதிக்க டீ, சூடான சூப் குடிப்பவரா? அப்படி எனில் இந்த கட்டுரை உங்களுக்குத்தான். அதிக கொதி நிலையில் உள்ள டீ, சூப், பருகுபவர்களுக்கு தொண்டை, வயிற்றுப் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாம். சமீபத்திய ஆய்வில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு பிரிட்டிஷ் மருத்துவ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 5 லட்சம்பேர் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புகையிலை, மது போன்றவைகளினால் ஆண்களும், பெண்களும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அதே சமயம் அதிக கொதி நிலையுடன் கூட பானங்களை பருகுவதன் மூலம் பெரும்பாலோனோர் தொண்டை புற்றுநோய்க்கு ஆளாக நேரிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு ஈரான் பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. டீ பருகும் பழக்கமுள்ள 300க்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் தினந்தோறும் ப்ளாக் டீ பருகுபவர்களாக இருந்தனர். அவர்களுக்கு மித வெப்பம், சராசரி வெப்ப நிலை உள்ள டீயினை பருக கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு பகுதியினருக்கு அதிக சூடான கொதிக்க கொதிக்க டீ கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு தொண்டையிலும், வயிற்றுப் பகுதியிலும் புற்றுநோய் செல்கள் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

ஈரானியர்கள் பெரும்பாலோனோர் அதிக சூடான டீ உள்ளிட்ட பானங்களை பருகுகின்றனர் இதனால் அவர்கள் அதிக அளவில் இந்த வகை புற்றுநோய்க்கு ஆளாவது கண்டறியப்பட்டது. டீ தயாரிக்கப்பட்ட நான்கு ஐந்து நிமிடங்கள் கழித்து குடிப்பவர்களை விட இரண்டு நிமிடங்களில் குடிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Offline Yousuf

நல்ல விழிப்புணர்வை எற்ப்படுத்தக்கூடிய தகவல் ரெமோ! தேநீர் அருந்துவதிலும் கவனம் தேவை என்பதை எச்சரிக்கையோடு தெரிய படுத்தியமைக்கு நன்றி!


Offline Global Angel

அப்படா நான் அதிகமான சூடு சாப்டுவதில்லை .... நல்ல தகவல் ரெமோ நன்றி