Author Topic: தோழியுடன் தொலைபேசியில் 02 அஞ்சல்  (Read 3768 times)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
தோழியுடன் தொலைபேசியில் 02     அஞ்சல்

அன்பின் வணக்கம்!

உன்னை காணமுன்னும் கெட்டதில்லை
உன்னை கண்டபின்னும் கெட்டதில்லை
எனியும் யாரிடமும் கெடப் போவதுமில்லை
உயிர் உள்ளவரையிலும் நீயே துடிப்பாய் இதயமாய்.

உனது சந்ததி உலகுக்கு பலன்ந்தர வல்லவை
திருமண பந்தமில்லாது எப்படி அது சாத்தியம்.....

திருமணமாகி கூடியே வாழ்கையில்
குணம்மாறி நிம்மதியை கெடுப்பேனெனும் பயமா ?
நீ சொன்னால் உயிரையும் விடுவேன்.....
நீ விரும்பா எதையும் என்னிடம் காணும் பாக்கியம்
எப்போதும் தந்திடேன்.


கடந்தோடிய ஐந்தாண்டு நட்பில்.....
நானெனும் நீ அறிந்த புனித பூமி
உனது உயரிய விதை விளையும் நிலமாய்.....
விளைந்த கொடியை உன் வம்சமாய்
உலகுக்கு ஒளியென கொடுப்பேன்.....

சத்தியத்தோடு சபதமும் செய்கின்றேன்
ஆயுள் உள்ளவரை என் எல்லாமும் நீயே.......
உங்களையன்றி இதயமதில்
எவரையும் எண்ணேன். 

இப்போது சொல்..... சம்மதமா ?
நிலமெனும் என் கருவறையில்
உன் வம்சத்தை விதைக்க....?

திருமணமாகி கூடியே வாழ்கையில்
குணம்மாறி நிம்மதியை கெடுப்பேனெனும்
சிந்தை தடுத்தால்

திருமணம் செய்து சொந்தம்
கொண்டாட வேண்டாம்
உன் வம்சத்தை என்னுள் விதைத்துவிட்டு
நீங்கள் விரும்பும் உலகப் பயணத்தை
தனியாக தொடருங்கள்.....
துணைவியாக அல்லாமல்
தோழமையோடு ஒத்தாசை செய்கிறேன்.....

என் திருமணம் என்பது உங்களுடன் அல்லாமல் நிகழவியலாதது
வேறொரு ஆடவன் என் உள்ளமதை நெருங்குதல் மரணமாகும்

நான் காலம் முழுதும் தனியே இருப்பது
நலமென கருதிடில் பதில் வேண்டாம்.
என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்
இல்லையெனில் உங்களைப்போல்
குழந்தை ஒன்று என்னை தாயாக்கட்டும்.....

எதுவானாலும் உங்கள் எண்ணம். ஆனால் என் எல்லாமும் நீயே.......

எப்படி தோணினும் பரவாயில்லை
காமுகியாகவோ ஒழுக்க கேடானவளாகவோ
கண்டிட வேண்டாம் என்பது எனது கணவரெனும் 
தெய்வத்திடம் நான்செய் வேண்டுதல்.


இல்வாழ்வின் முதல் நாளில் கொல்லப்படும்
பெண்கள் பலநூறு
தினமும் வல்லுறவுக்காய் கடத்தப்படும்
பாலகர்கள் பல்லாயிரம்
தினம் தினம் பாலியலுக்காய் விபச்சாரியாய்
மாற்றப்படுவோர் இலட்ச்சங்கள்

உங்கள் அனுமதியோடு
சுமக்கவில்லை இதயத்தில்
நீங்கள் மறுத்தாலும் உங்களை
நினைத்தே வாழமுடியுமெனும்
நிதானத்தோடே மனதில் சுமந்தேன்


இதயம் அழியும்வரை நீங்களே
என் வாழ்வானபின் வேறொருவருடன்
வாழ்வது நீங்கள் சொன்னதுபோல்
பொய்களை வாழ்வென்பதாகும்
அது விலைமாதுக்கு நிகரானது.....

அன்புடன்
செவ்வந்தி நிதிலன்
என் எல்லாமும் நீயே.......
« Last Edit: February 28, 2017, 12:17:47 AM by SarithaN »
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
தோழியுடன் தொலைபேசியில்

தொடர்ந்து வருபவை யாரையும்
அழச்செய்யுமா அப்படி நிகழ்ந்தால்
அதர்க்கு பொறுப்பானவன் நானல்ல.....
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ChuMMa

  • Sr. Member
  • *
  • Posts: 295
  • Karma: +0/-0

சகோ

இப்படி ஒரு காதல் அவளுக்கு..
இதயம் பட படைக்கிறது அவளுக்காக

படிக்கும் எங்களுக்கே காக்க முடியவில்லை அவன் பதிலுக்காக
பாவம் அவள்
3 படித்து விட்டு
 வருகிறேன் ....



En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் சகோதரா... 

ஆழ ஊடுருவி ஆழியிலும் ஆழமாய்
வேரோடிய நீண்ட நெடிய அன்பு.....


வாசகர் பார்வையில் களங்கமாகுமோ.....
கருணையே வடிவானவள் உள்ளமது
களங்கமென கண்டு கொள்வரோ எனும்
பதட்டம் படபடப்பு எனக்கு.....


தொடர்ச்சியை தொடர்ந்து படித்தால் தோழியின்..... 
தியாகத்தின் தெய்வீகத்தை உணர்வர்.....


படித்தமைக்கும் கருத்துரைக்கும் நன்றி
சகோதரா..... வணக்கம் 
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Sari na:) azhagana kadhal na:)
« Last Edit: April 07, 2017, 11:04:33 AM by VipurThi »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
நன்றி தங்கையே.....

உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....