காதலாய்
காதலில்
காதலோடு
காதலே வேண்டுமென
கொஞ்சும் குழந்தையாய்
கொஞ்சி கெஞ்சி கேட்டிடும்
வஞ்சி க் கிழவியே !
நடுக்கடலில் நின்று நீரையும்
நிலவிடம் சென்று குளிரையும்
நட்சத்திரங்களிடம் ஒளிர்வையும்
பகல் வானத்திடம் நீலத்தையும்
சீனச்சுவர அதனிடம் நீளத்தையும்
பிரசித்தமாய்
வேண்டுவதை போல் தான் ....
நின் காதலே காதலாய் எங்கும் நிறைந்திருக்கும் என்னிடம்
நித்தம் நித்தம் முத்தம் கேட்டு
வீண் மல்லுக்கு நிற்பதுவும் ......
#ஆசை அஜீத்