தூக்கம் தொலைக்கும் மருந்தில்லா நோய் - காதல்
தூக்கம் தொலைக்கும்
மருந்தில்லா நோய் இது - காதல்
வருமென நினைத்தால்
வருவதுபோல்
அறிகுறி தோன்றினால்
சிந்தை உண்டானால்
இயல்பு மறந்து கடமை தெலைத்து
இதயமேங்கி இமைக்காமல்
காத்திருக்கும் - நோயிது!
தலையணைகளை அரவணைக்கும்
அவைகளும் தற்காலிக துணையாகும்!
தூக்கம் தொலையும்
தொலைந்த தூக்கம் நிலைக்க
இதயத்தில் நிலைத்தவன் அருகில் - வேண்டும்
நிலைத்தவன் நிலைத்தால்
அன்றி தொலைத்த - தூக்கம்!
பெண்ணுக்கு மீள்வது
மீளாமையே உண்மை!
காதல் நிறைவேறட்டும்
இல்லை அழுதே மாண்டுபோகாதே
மீண்டு வா!
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே